Header Ads



கரைந்து செல்லும் கிழக்கை பாதுகாக்க, வடக்குடன் இணைக்க வேண்டும்


பெரும்பான்மை தேசத்தில் கரைந்து செல்லும் கிழக்கை பாதுகாக்க கிழக்குடன் வடக்கு இணைக்கப்பட வேண்டும் அதற்கு மக்கள் விழிப்படைய வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.


மட்டக்களப்பு கல்லடியிலுள்ள ஊடக கற்கை வளநிலையத்தில் நேற்று(11.02.2024) இடம்பெற்ற ஊடக மாநாட்டிலே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் போராட்டம் கருணா, பிள்ளையானின் உச்சகட்ட பிரதேசவாதம் ஊடாக அழிக்கப்பட்டது. அவ்வாறு மீண்டும் பிரதேசவாதம் ஊடாக வடக்கு கிழக்கு தமிழ் மக்களை அழித்து ஒழிப்பதற்காக செயற்பட்டுவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் போலி முகங்களை மக்கள் இனங்கண்டு ஒரங்கட்ட வேண்டும்.  


கடந்த காலங்களில் இந்திய ஒப்பந்தம் மூலம் கொண்டுவரப்பட்ட வடகிழக்கு இணைப்புக்கு எதிராக ஜே.வி.பி நீதிமன்றில் வழக்கு தொடர்ந்து அந்த இணைந்த வடகிழக்கு இணைப்பை பிரித்தது இந்திய அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாட்டையும் தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பட்டுக் கொண்டிருந்த ஜே.வி.பி கட்சி அனுரகுமார திஸாநாயக்கவை இந்தியா அழைத்துள்ளது.


1970ஆம் ஆண்டு பகுதியில் தமிழ் மக்கள் உரிமை சார்ந்து இந்தியா தமிழ் இளைஞர்களை அழைத்து அவர்களுக்கு ஆயுத பயிற்சியளித்து ஆயுதங்களை கொடுத்து ஆதரவு செய்துவந்தது.


இந்த நிலையில் தமிழ் மக்கள் உரிமை சார்ந்த விடயங்களில் இருந்த இயக்கங்களில் விடுதலைப் புலிகள் கடைசிவரை உறுதியாக இருந்துவந்தனர். இந்த நிலையில் விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு இலங்கை அரசுக்கு ஒத்தாசை வழங்கி தமிழ் மக்களின் ஆயுத போராட்டத்தை மௌனிக்க செய்தனர்.


இருந்தும் இந்த போராட்டம் மௌனிக்கப்பட்டு 14 வருடம் கடந்தும் தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வை எட்டாது மாறாக முன்னால் கிளர்ச்சி படையான ஜே.வி.பியை அழைத்து சந்தித்தமை தமிழ் மக்களுக்கு பெரும் கவலையளித்துள்ளது.


No comments

Powered by Blogger.