மோடியின் தாயகமான குஜராத்தில் அனுரகுமார
அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (NPP) குழுவினர், தமது இந்தியப் பயணத்தின் இரண்டாவது நாள் பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடியின் தாயகமான குஜராத்தை நோக்கி நேற்று சென்றனர்.
NPP தூதுக்குழு குஜராத் முதல்வர் புபேந்திர படேலை சந்தித்து மாநிலத்தில் சில சுற்றுப்பயணங்களை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
NPP தூதுக்குழு நேற்று முன்னணி இந்திய சிந்தனைக் குழுவான Observer Research Foundation ' பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
மேலும், NPP பிரதிநிதிகள் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தை பார்வையிட்டனர். முன்னதாக, இந்தப் பயணத்தின் போது, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டொக்டர் எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுச் செயலர் வினய் மோகன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
குழுவானது பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியால் ஆளப்படும் இந்திய மாநிலமான கேரளாவுக்குச் செல்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment