Header Ads

இலங்கையில் 84 ஆண்டுகளுக்குப் பிறகு அரியவகை மின் இனம்

Gymnothorax polyuranodon எனப்படும் அரியவகை மின் இனம் 84 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

கிங் கங்கையின் வக்வெல்ல பகுதியில் இந்த மீன் இனத்தின் ஒரு மாதிரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹிரண்ய சுதசிங்க (பெர்ன் பல்கலைக்கழகம்), தரிந்து ரணசிங்க (வைல்ட் ஐலண்ட் அறக்கட்டளை) மற்றும் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த லூகாஸ் ருபேர் (பெர்ன் இயற்கை அறிவியல் அருங்காட்சியகம்) ஆகியோரின் ஆய்வுக் குழு இதுபற்றி அறிவித்துள்ளனர்.

மேலும், இது தொடர்பான ஆய்வுக் கட்டுரை கடந்த 23-ஆம் திகதி வெளியிடப்பட்டது. இது சர்வதேச அறிவியல் இதழான Zootaxa ஆல் வெளியிடப்பட்டது.

இந்த இனம் இலங்கையிலிருந்து முதன்முதலில் 1937 இல் இரத்தினபுரியில் அடையாளம் காணப்பட்டது , ஆனால் இந்த இனம் மீண்டும் இலங்கையில் பதிவாகவில்லை. அதன்படி, 2021 ஆம் ஆண்டில், வக்வெல்ல பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் இந்த மீன் இனத்தை கண்டுள்ளார். இதையடுத்து இந்த மீன் குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த மாதிரியின் மரபணு பண்புகளை ஆராய்ந்த பிறகு, இது ஜிம்னோதோராக்ஸ் பாலியூரனோடான் இனத்தைச் சேர்ந்தது என்பது உறுதி செய்யப்பட்டது.

பொதுவாக இந்த இனங்கள் உவர்நீர் வாழ்கின்றன, ஆனால் மிக அரிதாக நன்னீரில் காணப்படுகின்றன. இந்தோனேசியாவின் ஃபிஜி தீவுகள் மற்றும் அவுஸ்திரேலியாவில் உள்ள வெப்பமண்டல நதிப் படுகைகளில் இந்த இனம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.