இந்த ஆண்டு 83 கொலைகள் - குற்றச்செயல்களை கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை
இலங்கையில் இந்த ஆண்டு (2024) இதுவரை மொத்தம் 83 கொலைகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
இந்த காலப்பகுதியில் பதிவான 76 சம்பவங்களில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது: ஜனவரி முதல் இன்று வரை மொத்தம் 1,180 திருட்டு சம்பவங்களும், 310 கொள்ளை சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இந்த வருடத்தில் இதுவரை 20 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதில் 10 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுகிறது .
எவ்வாறாயினும், நாட்டில் இடம்பெறும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை பொலிஸார் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment