Header Ads



65 வருடமாக சேகரித்த நூல்களை NPP க்கு வழங்கிவிட்டு, பலம்பொருந்திய ஜாம்பவான் கூறிய வார்த்தைகள்


இடதுசாரி இயக்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற பலம்பொருந்திய ஜாம்பவானும், எழுத்தாளருமான வயது 91 வருடங்களைப்  பூர்த்திசெய்த  சட்டத்தரணி  எஸ். ஜீ. புஞ்சிஹேவா எழுதிய புத்தகங்களை உள்ளிட்டதாக ஏறக்குறைய 65 வருடகாலமாக தனது நூலகத்திற்காக சேகரித்த பல நூல்களை தேசிய மக்கள் சக்திக்கு நன்கொடையாக வழங்கியமை நேற்று (19) பிற்பகல் அவருடைய வீட்டில் இடம்பெற்றது. 


இந்த தருணத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, பா.உ. கலாநிதி ஹரினி அமரசூரிய, கே.டீ. லால்காந்த, சட்டத்தரணி உபுல் குமரப்பெரும  உள்ளிட்ட குழுவினர் பங்கேற்றனர். 


"நான் ஏறக்குறைய 65 வருடங்களாக சேகரித்த பல்வேறு விடயத்துறைகளைச் சேர்ந்த பெருந்தொகையான நூல்கள் இருக்கின்றன.  இந்த நூல்களை  பொதுவில் பாவனைக்கு எடுக்கவல்ல மிகச்சிறந்த குழுவினர் யாரென நான் சிந்தித்துப் பார்த்தேன். இந்த மிகச்சிறந்த அணி தேசிய மக்கள் சக்தியே என நான் உணர்ந்தேன். மக்கள் விடுதலை முன்னணியால் நிர்மாணிக்கப்பட வேண்டுமென சிந்தித்த தேசிய மக்கள் சக்தி என்பது தலைசிறந்த படைப்பாகும். தேசிய மக்கள் சக்தியில் பெருந்தொகையான புத்திஜீவிகள் இருக்கிறார்கள். அவர்கள் வெறும் புத்திஜீவிகள் மாத்திரமல்ல. அவர்கள் மக்கள்மீது கரிசனைகொண்ட  மனோபாவம் படைத்தவர்களாவர். அதோ அந்த விடயத்தையும் நான் இந்த நன்கொடைக்கு அடிப்படையாகக் கொண்டேன்.". எஸ். ஜீ. புஞ்சிஹேவா  அதன்போது தனது மகிழ்ச்சியை ஊடகத்திற்கு  தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.