5 ஆம் திகதிக்கு முன், ஹஜ் யாத்திரிகர்கள் பதிவு செய்து கொள்ளவும்
இவ்வருடம் ஹஜ் யாத்திரையை மேற்கொள்வதற்காக நேற்று புதன்கிழமை வரை 2630 பேரே விண்ணப்பித்துள்ளார்கள். இவ்வருட ஹஜ் விசா எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி முதல் சவூதி ஹஜ் உம்ரா அமைச்சினால் விநியோகிக்கப்படவுள்ளதால் எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன் ஹஜ் யாத்திரைக்கு திட்டமிட்டுள்ளவர்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளனர்.
இறுதி நேர நெருக்கடிகளைத் தவிர்ப்பதற்காக ஹஜ் யாத்திரைக்கு திட்டமிட்டுள்ளவர்கள் தாமதியாது 25 ஆயிரம் ரூபா பதிவுக்கட்டணைத்தைச் செலுத்தி தங்களைப் பதிவு செய்து கொண்டு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டுள்ள ஹஜ் முகவர் நிலையங்களைத் தொடர்பு கொண்டு பயண ஏற்பாடுகளை முன்னெடுக்கும் படி ஹஜ் முகவர்கள் சங்கத்தின் தலைவர் ஏ.சி.பி.எம்.கரீம் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
திணைக்களத்தினால் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ள 93 ஹஜ் முகவர்களின் பெயர் பட்டியல் மற்றும் விபரங்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் முகநூல் பக்கம் மற்றும் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதெனவும் அவர் கூறினார்.
எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி முதல் ஏப்ரல் 25ஆம் திகதி வரை சவூதி ஹஜ் உம்ரா அமைச்சு ஹஜ் விசாக்களை விநியோகிக்கும் எனவும் அவர் தெரிவித்தார். – Vidivelli
Post a Comment