Header Ads



நேருக்கு நேராக மோதி விபத்து - ஒருவர் வபாத், 3 பேர் காயம்


- பேரின்பராஜா சபேஷ் -


மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதான வீதியில் தன்னாமுனையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.


வெள்ளிக்கிழமை (16) இரவு காத்தான்குடியிலிருந்து  ஏறாவூர் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி தன்னாமுனையில் பட்டா ரக வாகனம் நேருக்கு நேராக மோதியத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது.


இச்சம்பவத்தில் முச்சக்கரவண்டிவில் பயணித்த காத்தான்குடியைச் சேர்ந்த றஹீம் றியாஸ் என்பவர் உயிரிழந்ததுடன்  முச்சக்கரவண்டி சாரதி, குழந்தை மற்றும் பெண் காயமடடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிற்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


உயிரிழந்தவரது சடலம் பிரதேசப் பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஏறாவூர்ப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.    

No comments

Powered by Blogger.