Header Ads



30,000 கோடி ரூபாய்க்கு மேல் நகைகள், சொத்துக்களை விற்ற மக்கள் - பொருளாதார நெருக்கடி தொடருகிறது

 


கடந்த மூன்றாண்டுகளில் 30,000 கோடி ரூபாய்க்கு மேல் நகைகள் மற்றும் சொத்துக்கள் விற்கப்பட்டுள்ளன அல்லது அடமானம் வைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் பதிவுகளில் தெரியவந்துள்ளது.


நாட்டில் தொடரும் பொருளாதார சிக்கல்கள் காரணமாக, மக்கள் தங்கள் சொத்துக்களை அடமானம் அல்லது விற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


மேலும் சில வீடுகளில் இருந்த நகைகள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதற்கமைய, கடந்த சில ஆண்டுகளில் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான வாகனங்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.


மேலும், பொருளாதார சிக்கல்கள் காரணமாக வாகனங்கள் வாங்குவதும் சுமார் 80 சதவீதம் குறைந்துள்ளதாகவும் வாகனச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதற்கமைய, கடந்த இரண்டு ஆண்டுகளில் கட்டுமானத்தொழில் தொடர்பான வாகனங்கள், விவசாயம் தொடர்பான வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

No comments

Powered by Blogger.