சராசரியாக தினமும் 27,295 பேர் விமான நிலையங்கள் ஊடாக வந்து செல்கின்றனர்
- இஸ்மதுல் றஹுமான் -
ஜனவரி மாதத்தில் இலங்கையின் சர்வதேச விமான நிலயங்கள் ஊடாக 208,253 பயணிகள் வந்து சென்றுள்ளனர். இதில் சர்வதேச சுற்றுலா பயணிகளின் 207,182 பேர் வந்து சென்றுள்ளதாக இலங்கை விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவன தலைவர் பொறியியளார் அதுல கல்கெடிய தெரிவித்தார்.
அவர் ஊடகங்களுக்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
சராசரியாக தினமும் 27,295 பேர் விமான நிலையங்கள் ஊடாக வந்து செல்கின்றனர். இதில் தினமும் 6,683 உல்லாசப் பயணிகள் சர்வதேச விமான நிலையங்கள் ஊடாக இலங்கையை வந்தடைகின்றனர். இது கோவிட் தொற்றுக் காலத்திற்கு முன் இருந்த நிலமையை அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம், மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் என்பவற்றின் ஊடாகவே இவை இடம்பெற்றுள்ளன.
விமான நிலையத்தின் 2024 ஜனவரி மாத புள்ளிவிபரங்களின் அடிப்படையில் 846,173 பயணிகளின் விமானநிலயங்களை பயன்படுத்தியதன் மூலம் உல்லாசப் பயணிகளின் வருகை அபிவிருத்தி அடைந்துள்ளது.
2022 ஜனவரியில் 82,327 உல்லாசப்பயணிகள் வந்துள்ளதுடன் அது 2023ல் 102,545 ஆக அதிகரித்து 24.5 சதவீத வளர்ச்சியை காண்பித்துள்ளது. கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இல் வருடம் ஜனவரியில் 208,253 சுற்றுலா பயணிகளின் வருகையினால் 103 சதவீத அபிவிருத்தியை எய்தியுள்ளது.
மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக 102 விமான போக்குவரத்து மூலம் 11,801 உல்லாசப்பயணிகள் உட்பட 23,739 பயணிகளின் போக்குவரத்து இடம்பெற்றுள்ளன.
யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையத்தை 2024 ஜனவரியில் சர்வதேச பயணிகள் 3,413 பேரும் உள்நாட்டு பயணிகள் 271 பேரும் பயன்படுத்தியுள்ளனர்.
2018 ம் வருடத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 29,800 பயணிகள் என்ற அடிப்படையில் 10.8 மில்லியன் பயணிகளும் 2019ல் தினம் 27,280 என்ற அடிப்படையில் 9.9 மில்லியன் பயணிகளும் பயன்படுத்தியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
தலைவர் அதுல கல்கெடிய மேலும் கூறுகையில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்திற்கொண்டு இலங்கை விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம் மற்றும் கட்டுநாயக்க விமான நிலைய அடிப்படை வசதிகளை அதிகரிப்பதற்கான பொறிமுறையை அபிவிருத்தி செய்ய குறுகியகால நீண்டகால திட்டங்கள் நடைமுறை படுத்தப்படுவதாக தெரிவித்தார்.
Post a Comment