நீர்கொழும்பில் 12 கிலோ பீட்சா - சாப்பிடுவதற்காக படையெடுத்த 100 பேர்
உலக பீட்சா (Pizza) தினத்தையிட்டு நீர்கொழும்பிலுள்ள ஹோட்டலொன்றின் ஊழியர்களால் மிகப்பெரிய பீட்சா தயாரிக்கப்பட்டுள்ளது.
பீட்சாவுக்காக பெருமளவான பீட்சா விரும்பிகள் ஹோட்டலுக்கு வருவதாக, ஹோட்டல் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
உலக பீட்சா (Pizza) தினம் பெப்ரவரி 09ஆம் திகதியாகும். இதற்காக 50 அங்குல நீளமும் 12 கிலோ நிறையும் கொண்டதாக பீட்சாவை ஹோட்டலின் ஊழியர்கள் தயாரித்துள்ளதுடன், அதை 08 நிமிடங்களில் பேக் செய்ததாகவும், அவர்கள் தெரிவித்தனர்.
ஹோட்டலின் நிறைவேற்று சமையல் கலைஞர் துமிந்த வணிகசேகர இதற்கான முயற்சியை எடுத்து, இலங்கையில் மிகப்பெரிய பீட்சாவை தயாரித்துள்ளார்.
தக்காளி, மொஸரெல்லா சீஸ், கோழி இறைச்சி, 4 வெவ்வேறு நிறங்கள் மற்றும் சுவையூட்டி கொண்ட பெல் பெப்பர்ஸ், ஒலிவ் எண்ணெய், பச்சை வெங்காயம் ஆகிய கலவைகள் இதற்காக சேர்க்கப்பட்டுள்ளன.
ஹோட்டலுக்கு 100 இற்கும் மேற்பட்டோர் இந்த பீட்சாவை உட்கொள்வதற்காக வருகை தந்துள்ளதாகவும், ஹோட்டல் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
Post a Comment