இதுபோன்ற வாசனை, பிள்ளைகளிடம் இருந்து வந்தால் கண்டுபிடிக்கவும் - அரசாங்கத்திற்கு 10 கோடி இழப்பு
இதன்போது, 25 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
30 இலட்சம் ரூபா பெறுமதியான ஈ -சிகரெட் கையிருப்பு இதன்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் அரசாங்கத்திற்கு 10 கோடி ரூபா வரி வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஜா-எல கலால் அத்தியட்சகர் பிரமேஸ் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
இந்த ஈ - சிகரெட்டுக்களுக்கு இளைஞர் சமூகம் மற்றும் சிறுவர்கள் அதிகளவில் அடிமையாகி வருவதாகவும் இது ஆபத்தான நிலை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜா-எல கலால் அத்தியட்சகர் பிரமேஸ் பெர்னாண்டோ,
"சிகரெட்டை விட இது அதிக போதை ஏற்படுத்தக்கூடியது. ஈ-சிகரெட் புகைப்பதை உங்களால் கண்டுபிடிக்க கூட முடியாது. வெவ்வேறு வாசனைகள் வெளியேறுகின்றன. இதுபோன்ற வாசனை உங்கள் பிள்ளைகளிடம் இருந்து வந்தால், தயவுசெய்து கண்டுபிடிக்கவும். இந்த ஈ-சிகரெட்டுகள் வெவ்வேறு வழிகளில் தயாரிக்கப்படுகின்றன. . சில சமயங்களில் கையில் கட்டப்படும் ஸ்மார்ட் கடிகாரத்தின் வடிவில் இருக்கும். , தெளிவாக அடையாளம் காண முடியாத வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது."
Post a Comment