Header Ads



100 மில்லியன் ரூபா நட்டஈடு கோரும் கெஹலிய


குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தம்மை எவ்வித நியாயமான காரணமும் இன்றி கைது செய்து விளக்கமறியலில் வைத்ததன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தனது சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.


சட்டத்தரணி சனத் விஜேவர்தன ஊடாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் உள்ளிட்டோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.


அடிப்படை மனித உரிமைகளை மீறியமைக்காக பிரதிவாதிகளிடமிருந்து 100 மில்லியன் ரூபா நட்டஈட்டை பெற்றுத்தருமாறும் மனுதாரர் கோரியுள்ளார்.

No comments

Powered by Blogger.