UNRWA க்கான நிதியை இடைநிறுத்திய நாடுகள், தங்கள் முடிவுகளை மறுபரிசீலனை செய்யுமாறு வேண்டுகோள்
ஐக்கிய நாடுகள் சபையின் 15 தலைவர்கள் மற்றும் அரச சார்பற்ற மனிதாபிமான உதவி அமைப்புக்கள் UNRWAக்கான நிதியுதவியை இடைநிறுத்திய நாடுகள் தங்கள் முடிவுகளை மறுபரிசீலனை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
"UNRWA வின் நிதியை இடைநிறுத்த பல்வேறு உறுப்பு நாடுகளின் முடிவுகள் காசா மக்களுக்கு பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
"காசாவில் உள்ள 2.2 மில்லியன் மக்களுக்கு அவசரமாகத் தேவைப்படும் உதவியின் அளவையும் அகலத்தையும் வழங்கும் திறன் வேறு எந்த நிறுவனத்திற்கும் இல்லை" என்று அது மேலும் கூறியது.
Post a Comment