Header Ads



SJB இல் இணைந்தது ஏன்..? இன்னும் பலர் இணைவர்


சுதந்திரக் கட்சியில் எனக்கு எவ்வித அநீதியும் இழைக்கப்படவில்லை. எனினும் நாட்டின் தற்போதைய பிரச்சினைக்கு மக்கள்வாத தலைவரின் தலைமைத்துவமே அவசியமாகும். இந்நிலையில் தற்போதைய யுகத்திற்கு சஜித் பிரேமதாசவின் தலைமைத்துவம் மிக மிக அவசியம் என்ற காரணத்தினாலேயே ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தேன். என்னுடைய வரவானது அடுத்த தேர்தலுக்காக ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் ஸ்தாபிக்கவுள்ள பொது கூட்டணியின் ஆரம்பமாகும் என ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த சு.க.வின் சிரேஷ்ட உப தவிசாளர் சான் விஜயலால் டி சில்வா தெரிவித்தார்.


அத்துடன் சுதந்திர கட்சியை சேர்ந்த பலர் விரைவில் ஐ.ம.ச.வில் இணைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அனைத்து கட்சியினரும் பொதுகூட்டணியில் இணைவது பொது வேலைத்திட்டத்தை அடிப்படையாக கொண்டாகும். தற்போதுள்ள மோசமான ஆட்சியை விரட்டியடிக்க சஜித் பிரேமதாசவினால் மாத்திரமே முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து அம்பலாங்கொடை தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டதன் பின் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (01) நடந்த விசேட ஊடக சந்திப்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,


அத்துடன் தங்களை புதியவர்கள் என அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி காட்ட முனைந்தாலும் இந்த நாட்டில் நடந்த ஆட்சி கட்டமைப்பில் அவர்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்களிப்பு செலுத்தியுள்ளனர். எனவே இலங்கையின் முழு ஆட்சி பொறுப்பையும் குறை கூறுவாதாக இருந்தால் ஜே.வி.பி.யும் அதன் பங்குதாரர்கள் என்றார்.


No comments

Powered by Blogger.