பாபர் மசூதி இருந்த இடத்தில், ராமர் கோவில் - இஸ்லாமிய நாடுகள் வெளியிட்டுள்ள அறிக்கை
ஓஐசி செவ்வாயன்று ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில்,
"இந்திய நகரமான அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட அதே இடத்தில் 'ராமர் கோவில்' கட்டப்பட்டது கவலைக்குரியது,” என இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள நாடுகள் கூறியுள்ளன.
இந்த நிகழ்விற்கு ஒரு நாள் கழித்து, ஜனவரி 23 அன்று மசூதிக்கு பதிலாக ராமர் கோவில் கட்டப்படுவதற்கு ஓஐசி கண்டனம் தெரிவித்துள்ளது. அதுகுறித்த தனது அறிக்கையில், "ஓஐசி நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கவுன்சிலின் முந்தைய கூட்டங்களில் வெளிப்படுத்தப்பட்ட நிலைப்பாட்டிற்கு ஏற்ப, பாபர் மசூதி போன்ற முக்கியமான இஸ்லாமிய தளங்களை அழிக்கும் இந்த நடவடிக்கைகளை நாங்கள் கண்டிக்கிறோம்," எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு இந்தியா தரப்பில் இருந்து இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை.
ஓஐசி என்பது இஸ்லாமிய அல்லது முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளின் அமைப்பு. இதில் மொத்தம் 57 நாட்டின் உறுப்பினர்கள் உள்ளனர்.
Post a Comment