Header Ads



சவூதி அரேபியாவில் இன்னுமொரு, அதி சொகுசுச் சுற்றுலாத்தலம்: ‘Epicon’


- காலித் ரிஸ்வான் -


சவூதி அரேபியாவில் வளர்ந்து வரும் உலகின் முக்கியமான சுற்றுலாப் பிராந்தியமான NEOM இல், ‘Epicon’ என்ற மக்கள் குடியிருப்புகளுடன் கூடிய நவீன ஆடம்பர கடலோர சுற்றுலாத்தலம் ஒன்று அமையக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


அகபா வளைகுடாவில் அமைந்துள்ள ‘Epicon’ ஆனது, உயர் கட்டிடக்கலை மற்றும் ஆடம்பர வசதிகள் ஆகிய இரண்டிலும் உச்சம் தொடும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுலாத்தலத்தில், 225 மீட்டர் உயரமும் 275 மீட்டரை எட்டும் அளவு உயரமும் கொண்ட இரு கண்கவர் கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 41 முக்கிய ஹோட்டல்கள், 14 அறைத்தொகுதிகள் மற்றும் அதி சொகுசு குடியிருப்புக்களும் அமைக்கப்பட்டுள்ளன. ஆடம்பரத்தையும் அமைதியையும் ஒருங்கிணைக்கும் வகையில், 120 அறைகள் மற்றும் 45 கடற்கரை வில்லாக்களைக் கொண்ட Epicon Resort என்ற ஒரு தளமும் அமைக்கப்பட்டுள்ளன.


இந்த Epicon அமைப்பானது எதிர்காலத்திற்கான நுழைவாயிலாக வர்ணிக்கப்படுகிறது. மக்களின் அன்றாடச் சிரமங்கள் கலைப்புகளில் இருந்து விடுபடுவதற்கான சிறந்த ஒரு இடமாக இது அமைவதோடு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடியிருப்பாளர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடற்கரை கிளப்கள், ஆரோக்கிய சிகிச்சைகள் மற்றும் மஸாஜ்களைப் பெற ஸ்பா அமைப்புகள், புத்தாக்கங்களைக் கொண்ட சூழல், பல வகைப்பட்ட நீர் சார் விளையாட்டுகள், பல நாட்டு உணவு வகைகளையும் கொண்ட உணவகங்கள் போன்ற அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது.


உடற்பயிற்சிக்கான நவீன வசதிகள், நூலகம், அலுவலகங்கள், நீச்சல் தடாகங்கள் மற்றும் ஓய்வறைகள் போன்ற பல எல்லையற்ற ஆடம்பர வசதிகளைக் கொண்டிருப்பதோடு, Epicon, குடியிருப்பாளர்களும், பார்வையாளர்களுக்கும் NEOM இன் மிக அழகான கடற்கரையோரங்களில் ஆடம்பரமாக பொழுதைக் கழிக்கும் அனுபவத்தையும் பெறலாம். 


எனவே இந்த சுற்றுலாத்தலமானது சவூதி அரேபியாவின் இலட்சிய திட்டமான விஷன் 2030 இன் இலக்குகளை அடைவதில் ஒரு முயற்சியாக அமைவதோடு அந்நாட்டு பொருளாதார மற்றும் சுற்றுலாத் துறைகள் மூலமான இலாபத்தை பன்மடங்காக்கும் முயற்சிகளில் ஒன்றாகவும் இருக்கிறது. அத்தோடு தற்போது உலகில் அதிகளவு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக் கூடிய நாடுகளில் ஒன்றாகவும் சவூதி அரேபிய மாறி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.