நெடுஞ்சாலைகளில் புதிய விதிகள் - புதிய வர்த்தமானி
மெதுவாக செல்லும் வாகனங்களால் விபத்துக்கள் ஏற்படுவதால் அதிவேக நெடுஞ்சாலைகளில் குறைந்தபட்ச வேக வரம்புகளை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இன்று தெரிவித்தார்.
அதிகபட்ச வேக வரம்பு மணிக்கு 100 கிலோமீட்டர் என விதிக்கப்பட்டிருந்தாலும், குறைந்தபட்ச வேகம் இன்னும் விதிக்கப்படவில்லை என்று வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கூறினார்.
மெதுவாக செல்லும் வாகனங்களை முந்திச் செல்லும்போது பெரும்பாலான விபத்துகள் ஏற்படுவதாகவும், இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க குறைந்தபட்ச வேக வரம்பை நிர்ணயிப்பது முக்கியம் என்றும் அவர் கூறினார்.
அதிவேக நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துக்கள் தொடர்பாக துறைசார் நிபுணர்கள் மற்றும் பொலிஸ் போன்ற தொடர்புடைய நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டதாகவும், புதிய விதிகள் மற்றும் விதிமுறைகள் இரண்டு வாரங்களுக்குள் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.
Post a Comment