Header Ads



ஸ்பெயின் வரலாற்றில் வீரமங்கை, தியாகி சலீமா பின்த் ஜாபர்


இஸ்லாமிய ஸ்பெனில் அறிவுக்கும், படிப்புக்கு பெயர் பெற்ற ஒரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஸலீமா சிறு பருவம் தொட்டே வாசிக்கும் ஆர்வத்தையும், தேடலுக்கான வேட்கையையும் இயல்பாகவே கொண்டிருந்தாள். 


தனது பாட்டனார் அபூ ஜாபர் விட்டுச் சென்ற ஒரு பெரும் நூலகமே அவளிடம் சிறுவயதில் இருந்தது. ஆனால் அது அப்படியே அவள் சிறுமியாக இருக்கும் போது கத்தோலிக்க விசமிகளால்  பாபுல்-ரம்லா முற்றத்தில் அப்போது மேற்கொள்ளப்பட்ட மாபெரும் புத்தக எரிப்பு அசம்பாவிதத்தில் சாம்பலாகிப் போனது. 


அன்றைய ஸ்பைனில் ஸலீமா பல்வேறு கலைஞானங்களையும் படித்து தேர்ச்சி பெற்ற பெண்கள் வ‌ரிசையில் முதல் இடத்தில் இருந்தாள். குறிப்பாக மூலிகை வைத்தியத்தில் கொடிகட்டிப் பறந்தாள். 


அவளது வீடு மருத்துவ ஆய்வகமாகவும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான மருத்துவ நிலையமாகவும் காணப்பட்டது. 


அவள் மீது சந்தேகக் கண்கொண்டு பார்த்த கத்தோலிக்க சித்திரவதை முகாம்கள், அவளை தீர்த்துக்கட்ட முடிவெடுத்தது. 


மாந்திரீகக்காரி என குற்றச்சாட்டி கைது செய்தது மட்டுமல்லாமல், ஷைத்தானின் மூலமாக கர்ப்பமானவள் எனவும் குற்றம் சாட்டியது. 


காரணம், சாத் அல்-மல்கி என்ற அவரது கணவர் ஒரு முஜாஹிதாகவும், கத்தோலிக்க விசாரணை சபையால் தேடப்பட்டுபவர் என்பதாகும். 


நபிகளார் (இஸ்ராஃ) விண்ணுலகப்பயணம் செய்ததை அவள் நம்புகிறாள் என்பதற்காக இரவில் ஆகாயத்தில் பறக்கும் சூனியக்காரி என வினோதமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டது. 


பின்னர் ஸலீமா, உயிரோடு எரித்து மரண தண்டனை வழங்கப்பட வேண்டுமென ஈவிரக்கமின்றி நகைப்புக்குறிய கத்தோலிக்க மத நீதிமனறத்தால் தீர்ப்பளிக்கப்பட்டது. 


வீரமங்கை ஸலீமா அல்லாஹ்வின் எதிரிகளிடம் தலைகுனியாமல் மனவுறுதியுடன் அல்லாஹ்வை சந்திக்க வீரமரணத்தை எதிர் கொண்டாள். வல்லன் அல்லாஹ் தியாகிகள் பட்டயலில் அவளை அங்கீரிப்பானாக.


✍ தமிழாக்கம் / imran farook 

No comments

Powered by Blogger.