Header Ads



வெலிகம 'மத்ரஸத்துல் பாரி' அரபுக் கல்லூரியில் சிக்கல், தற்காலிகமாக மூட பணிப்பு - ஆசிரியர் அடித்ததற்காக மூட வேண்டுமா என ஒரு தரப்பு விசனம்


- ஐ. ஏ. காதிர் கான் - 


   வெலிகம, கல்பொக்க, புகாரி மஸ்ஜித் மாவத்தையில் இயங்கி வரும் "மத்ரஸத்துல் பாரி" அரபுக் கல்லூரியில் கற்கும்  மாணவர் ஒருவர், அக்கல்லூரியில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரினால், (16) செவ்வாய்க்கிழமை கடுமையாகத் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் தகுந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு முடியும் வரை, குறித்த கல்லூரியை தற்காலிகமாக மூடுமாறு, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கல்லூரி நிர்வாகத்தைப் பணித்துள்ளது.


   இது தொடர்பில், திணைக்கள உதவிப் பணிப்பாளர் என். நிலோபரின் கையொப்பத்தில் 2024.01.19 ஆம் திகதி யிடப்பட்ட கடிதம் ஒன்றும், கல்லூரியின் தலைவர் மற்றும் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

   அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

   

கல்லூரியை தற்காலிகமாக மூடுதல்

----------------------------------------------

   "கடந்த 2024.01.16 ஆம் திகதி தங்களின் அரபுக் கல்லூரியில் ஒரு ஆசிரியர் மூலம், மாணவர் ஒருவர் பலமாகத் தாக்கப்பட்ட விடயம், திணைக்களத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

   மேற்படி விடயம் தொடர்பாக, கல்லூரி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களை விசாரணை செய்ய திணைக்களம் திட்டமிட்டுள்ளது. விசாரணை மேற்கொள்ளப்படும் திகதி பின்னர் அறிவிக்கப்படும். 

   எனவே, திணைக்களத்தின் விசாரணை முடிவுறும் வரை, 2024.01.19 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) முதல் தற்காலிகமாக கல்லூரியை மூடி, பாதுகாப்பாக மாணவர்களை பெற்றோர்கள்/பாதுகாவலர்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்".

- என். நிலோபர், உதவிப் பணிப்பாளர், பணிப்பாளருக்காக, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்.


**********************************


'மத்ரஸத்துல் பாரி' அரபுக் கல்லூரியை தற்காலிகமாக மூட வேண்டும் என்னும் தீர்மானத்தை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும்*

*_அஷ்ஷெய்க் ஹஸ்ஸான் சுலைமான் (நளீமி)_*


- ஐ. ஏ. காதிர் கான் - 

    இலங்கை மத்ரஸா வரலாற்றில் முன்னோடி அரபுக் கல்லூரிகளில் ஒன்றாக அடையாளப்படுத்தப்படும் 'மத்ரஸதுல் பாரி' அரபுக் கல்லூரியில் கற்கும் ஒரு மாணவரை, குறித்த கல்லூரியின் ஓர் ஆசிரியர் அடித்துக் காயப்படுத்திய சம்பவத்தை முன்னிறுத்தி, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்

அந்தக் கல்லூரியை, தற்காலிகமாக மூட வேண்டுமென தீர்மானம் எடுத்தமை, பொருத்தமானதொரு நடவடிக்கையாகத்தெரியவில்லை. இக்கருத்தில் சமூகத்தில் உள்ள புத்தி ஜீவிகள் அனைவரும் என்னுடன் உடன்படுவார்கள் என நம்புகிறேன். 

ஓர் ஆசிரியரின் நடவடிக்கைக்காக, முறையான விசாரணை முன்னெடுக்கப்பட்டு, அவருக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்குப் பதிலாக, குறித்த அரபுக் கல்லூரியையே உடன் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக மூடுவதற்குத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமையை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறன். 

   'Corporal Punishment' என வழங்கப்படும் உடலியல் ரீதியாக பாதிப்பை உண்டு பண்ணக் கூடிய தண்டனை பற்றிய மேலதிக விவரங்கள் தேவைப்படுவோர், கீழ்வரும் கட்டுரையை வாசிக்கவும். 

(இந்த அறிக்கை எமது நாட்டை மையப்படுத்தியது):

Corporal Punishment of children in Sri Lanka - Country report

   பின்வரும் விடயங்களில் போதிய தெளிவு இருப்பதானது, தகுதியும் நம்பிக்கையுமான நிலைப்பாட்டை வலியுறுத்தும் என காண்கிறேன்: 

1. உடலியல் ரீதியாக பாதிப்பை உண்டு பண்ணக் கூடிய (Corporal Punishment) வகையில் கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் தண்டனை முறை பற்றிய ஒரு பொதுவான பார்வையும், உலகளாவிய மட்டத்தில் அது பெற்றிருந்த செல்வாக்கு மற்றும் அது தொடர்பில் நவீன உலகில் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் முதலான தெளிவைப் பெற்றிருத்தல். 

2. உடலியல் ரீதியாகப் பாதிப்பை உண்டு பண்ணக் கூடிய (Corporal Punishment) தண்டனைகளை மாணவர்களுக்கு வழங்குவது குறித்த சட்ட ரீதியான ஏற்பாடுகள், இலங்கையில் எப்போது கொண்டு வரப்பட்டன; கோட்பாட்டளவில் அது எழுத்து வடிவில் காணப்பட்டாலும், அதன் நடைமுறை எவ்வாறு காணப்படுகிறது என்ற விடயத்தை ஆராய்தல்.

(இதற்கு இக்கட்டுரைகளை வாசிக்கலாம்-->)

3. இலங்கையில் ஒரு கல்வி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் ஒரு ஆசிரியர் அல்லது ஒரு குழு மூர்க்கத்தனமான முறையில் மாணவர்களுக்கு தண்டனை வழங்கியதற்காக, முழு நிறுவனத்தையே மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான சான்றுகள் உள்ளனவா என்பதைத் தேடுதல். 

(பின்வரும் சம்பவங்களில் குறித்த பாடசாலைகள் மூடப்பட நடவடிக்கை எடுக்கப்படவில்லை; குறித்த நபர்களே சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டனர் என்பதைக் கருத்திற் கொள்ள வேண்டும்.

   இவ்வாறு, அஷ்ஷெய்க் ஹஸ்ஸான் சுலைமான் (நளீமி), அக்கட்டுரையில் தெளிவுபடுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.