Header Ads



கத்தார் மீது, நெதன்யாகு ஆத்திரம்


இஸ்ரேலின் சேனல் 12, 


மோதலில் தோஹா ஒரு மத்தியஸ்தராக செயல்படுவது 'சிக்கல்' என்று காசாவில் சிறைபிடிக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு  கூறிய பதிவுகளை ஒளிபரப்பியுள்ளது.


'ஹமாஸ் தலைவர்களை நடத்தும் வளைகுடா நாட்டின் மீது அதிக அழுத்தத்தை பிரயோகிக்காததற்காக' அமெரிக்காவுடன் நெதன்யாகு ஏமாற்றத்தை வெளிப்படுத்தியதாகவும் டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.


கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர்,


'நாங்கள் இரு தரப்புடனும் தீவிர விவாதங்களில் ஈடுபட்டு வருகிறோம். இரு தரப்பிலும் யோசனைகளை முன்வைத்துள்ளோம். இரு தரப்பிலிருந்தும் நாங்கள் தொடர்ந்து பதில்களைப் பெறுகிறோம், அதுவே நம்பிக்கைக்கு ஒரு காரணமாகும்இ' என்று மஜீத் அல்-அன்சாரி ஒரு செய்தி மாநாட்டில் கூறினார்.

No comments

Powered by Blogger.