அரசாங்கம் பைத்தியம் பிடித்து ஆடினாலும், நாங்கள் பைத்தியம் பிடித்து ஆட மாட்டோம்
நீதி நியாயம் குறித்து பேசும்போது இந்நாட்டின் பொருளாதார இயக்கிகளான நுண்,சிறிய மற்றும் நடுத்தர தொழில்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலினாலும், கொரோனா சூழ்நிலையினாலும், வங்குரோத்து நிலையினாலும், தமது கடன்களை செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். போட்டிக்கு இந்த தொழில் நிறுவனங்களின் சொத்துக்கள் பரேட் சட்டத்தின் மூலம் ஏலம் விடப்படும் சூழ்நிலை இன்று நாட்டில் உருவாக்கியுள்ளது.
இந்த தொழில் முயற்சியாண்மையினருக்கு பரேட் சட்டம் அமுல்படுத்தப்பட்ட போதிலும், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல்வாதிகளுடன் தொடர்புடைய பெரும் கடன்களை பெற்ற நட்பு வட்டார பெரும் செல்வந்தர்கள் தமது கடனை மறுசீரமைத்துக் கொண்டு தமது வணிகத்தை பாதுகாத்து மகிழ்ச்சியாக இருந்து வருகின்றனர்.எனவே இங்கு நியாயம் இருப்பதாக தெரியவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நாட்டின் சாதாரண மக்களுக்கு ஒரு சட்டமும்,அரசியல் அதிகாரங்களுடன் தொடர்புடைய,பெரும் செல்வந்தர்களுக்கு ஒரு சட்டமும் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.பல மாதங்களாக மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கி ஆகியவற்றில் இருந்து பெரும் தொகையான கடனைப் பெற்று,கடன்களை செலுத்த தவறிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் பட்டியலை சமர்ப்பிக்குமாறு நிதியமைச்சரிடம் கேட்டபோது, நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி இந்தக் கேள்விகளுக்கு ஒருபோதும் பதிலளிக்கவில்லை.இரு நிதி இராஜாங்க அமைச்சர்களும் கூட இந்தப் பிரச்சினைகளை மூடி மறைத்தனர்.
இதனால்,கடன் வாங்கி,கடனை செலுத்தாத பெரும் வியாபாரிகள் அரசியல் ஆதாயங்களுக்காக பாதுகாக்கப்படுகின்றனர்.
இவர்களது பணத்தைப் பயன்படுத்தி தேர்தலுக்கு பணம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் அரசாங்கம் செயற்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கடவத்தையில் இடம்பெற்ற நீதிக்கான மக்கள் ஆணை கருத்தமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
🟩வரிப்பணத்தில் உலகம் சுற்றும் நமது ஜனாதிபதி.
நாட்டை வங்குரோத்தாக்கிய குழுக்கள்,தமது விருப்பத்திற்கு ஏற்ப அதிக வட்டிக்கு கடன் வாங்கி,பலன் தராத பெரும் திட்டங்களுக்கு பணத்தை செலவழித்து,நாட்டு மக்களை கடன் சுமைக்குள் தள்ளி நாட்டை வங்குரோத்தாக்கினர்.
இந்நாட்டில் இன்றும் கூட ஊழலும்,மோசடியும், திருட்டுமே கோலோச்சுகின்றன.இவ்வாறான பிரச்சினைகள் இருந்தும், அரசாங்கம் எப்படியாவது மக்களின் கழுத்தை நெரித்தேனும் வரியை அறவிட்டு, வரிவருமானத்தை அதிகரித்துக் கொண்டு, குறித்த பணத்தை ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்களுக்கு பயன்படுத்தி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து 17 மாதங்களில் 18 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார். இதற்காக வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட தொகைக்கு மேலதிகமாக மேலும் 2000 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கிட்டிய நாட்களில் எந்த முக்கியத்துவமும் இல்லாத அவுஸ்திரேலியா மாநாட்டில் கூட கலந்து கொள்ள உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
🟩அரசாங்கம் பைத்தியம் பிடித்து ஆடினாலும் எதிர்க்கட்சியாகிய நாங்கள் பைத்தியம் பிடித்து ஆட மாட்டோம்.
அரசாங்கம் இவ்வாறு நடந்து கொண்டாலும் ஐக்கிய மக்கள் சக்தி நாட்டை சேவைப் பொருளாதாரத்துடன் மட்டுப்படுத்தாது, உற்பத்திப் பொருளாதாரத்திற்கு இட்டுச் செல்லும்.தற்போது,சேவை பொருளாதாரம் கூட நமது நாட்டில் சிறப்பாக இல்லை.
ஏனைய நாடுகளை விட நமது நாட்டில் தொழிலாளர்களின் தரத்தை உயர்த்தி அதன் மூலம் போட்டித் தன்மையை ஏற்படுத்த முடியும்.அதிகாரம் இல்லாவிட்டாலும் நாட்டின் 220 இலட்சம் மக்கள் சார்பாகவும் ஐக்கிய மக்கள் சக்தி நீதிமன்றம் சென்று,நாட்டை வங்குரோத்தாக்கிய ராஜபக்ச கூட்டணியை வெளிக்கொணர்ந்தோம்.இந்தத் தீர்ப்பின் மூலம்,இந்த பொறுப்பற்ற அரசாங்க நிர்வாகத்தால் பாதிக்கப்பட்ட எந்தத் தரப்பினருக்கும் இழப்பீடு கோரலாம். இதற்கான சட்ட ஆதரவை வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஆனால்,திருடர்களை பாதுகாக்கும் யுகமே தற்போதுள்ளது.ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் அரசியலமைப்பால் பாதுகாக்கப்படும் நிறுவனங்களை உருவாகி இலஞ்சம்,ஊழலை ஒழிப்போம்.
தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லை,
எனவே புதிய முறைமையின் மூலம் சட்டங்கள் உருவாக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
🟩ஊழலை ஒழிக்க எளிய பெரும்பான்மையால் மாற்ற முடியாத சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.
எந்தப் பெரும்பான்மையின் மூலமும் மோசடியான விடயங்களைக் கூட சட்டமாக்கும் அதிகாரம் பாராளுமன்றத்துக்கு உண்டு.புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் கூட இது போன்ற ஒன்று நடந்தது.எனவே பெரும்பான்மையினரால் நிறைவேற்றப்பட்ட இவ்வாறான சட்டத்திற்குப் பதிலாக அரசியலமைப்பின் ஊடாக இலஞ்சம் ஊழலை ஒழிக்கும் நிறுவனங்களை உருவாக்கி எளிய பெரும்பான்மையால் மாற்ற முடியாத வகையில் பலப்படுத்தும் புதிய ஏற்பாடுகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
🟩தற்போதைய ஜனாதிபதி திருடர்களைப் பாதுகாக்கிறார்.இதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
பாராளுமன்றத்தில், நாட்டை வங்குரோத்தடையச் செய்த பெரும்பான்மையான ராஜபக்ச உறுப்பினர்களாலயே தற்போதைய ஜனாதிபதி பாதுகாக்கப்பட்டு வருகிறார் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.இவர்கள் நியாயமற்ற வரிக் கொள்கையைப் பின்பற்றி வருகின்றனர்.எனவே இப்போதேனும் யதார்த்தமாகவும் உண்மையாகவும் சிந்தித்து தீர்மானங்களை எடுக்க முன்வாருமாறும்,
பின்னர் வருந்தத்தக்க அரசியல் தீர்மானங்களை எடுக்க வேண்டாம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
🟩எங்களை பணத்துக்காக வாங்க யாராலும் முடியாது.
இந்தப் பயணத்தை மேற்கொள்வது எளிதான ஒன்றல்ல.ஐக்கிய மக்கள் சக்தி கொள்கையை அடிப்படையாகக் கொண்ட கட்சி என்பதால்,எந்தத் தரப்பினராலும் இதை பணத்திற்காக எடுத்துக்கொள்ள முடியாது.என்றோ ஒரு நாள் மக்கள் ஆணை மூலமே நாம் ஆட்சிக்கு வருவோம்,அவ்வாறு வந்து ஏழை எழிய மக்களுக்கு நன்மை பயக்கும் சௌபாக்கியத்தை ஏற்படுத்துவோம்.குடிசன மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் 2016 அறிக்கையின் பிரகாரம்,நாட்டின் 20 சதவீத செல்வந்தர்கள் தேசிய வருமானத்தில் 52 சதவீதத்தை அனுபவித்து வருகின்றனர்.20% ஏழியோர் தேசிய வருமானத்தில் கிட்டத்தட்ட 5% அனுபவித்து வருவதானால்,இந்த நிலைமையை மாற்றி,உள்ளோர் இல்லாதோர் இடைவெளிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்க்கட்சித் மேலும் தலைவர்.
Post a Comment