Header Ads



நேரடியாகவே வாதாட இருக்கிறார் ஹக்கீம்


பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை , சட்டமாக்குவதானால் உரிய திருத்தங்களுக்கு அப்பால், அதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில்  இரண்டு பெரும்பான்மையோடு , சர்வஜன வாக்கெடுப்பும் அவசியமாகும் என்ற அடிப்படையில் செவ்வாய்க் கிழமை (30)உயர் நீதிமன்றத்தில் வாதாடப் போவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்ட முதுமாணி ரவூப் ஹக்கீம், திங்கள் கிழமை(29)உயர் நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்குத் தெரிவித்தார் 


பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை கேள்விக்குட்படுத்தி, உயர் நீதிமன்றத்தில் இதுவரை 37 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் பெயர் குறிப்பிட்டு தாக்கல் செய்துள்ள சிறப்பு நிர்ணய மனு(Special. Determination Application)  செவ்வாய்க்கிழமை(30) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் போது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம்   அந்த வழக்கில் நேரடியாகவே வாதாட இருக்கிறார்.


 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடைச் சட்டத்தை விட இந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் பல ஆபத்தான பிரிவுகளை கொண்டிருப்பதாகவும் அவர்  கடும் விசனம் தெரிவித்தார்.


பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் தலைமையில், ஐவர் அடங்கிய நீதியரசர் குழாம் முன்னிலையில் பிரஸ்தாப வழக்கு விசாரணை  உயர்நீதிமன்றத்தில் செவ்வாய்க் கிழமை (30)மூன்றாவது நாளாகவும் நடைபெறவுள்ளது.


 சட்டத்தரணி ஹபீப் றிபானும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமுடன் உயர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்.

No comments

Powered by Blogger.