Header Ads



பாராளுமன்ற உறுப்பினர்களின் வீட்டுத் தொகுதியை ஆக்கிரமித்துள்ள வெளியாட்கள்


மாதிவெல பாராளுமன்ற உறுப்பினர்களின் வீட்டுத் தொகுதியில் பாதியளவு வெளியாட்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாக பாராளுமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், நண்பர்கள், நலன் விரும்பிகள், முன்னாள் எம்.பி.க்கள் என சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் இந்த குடியிருப்புகளில் இருப்பதாக தெரியவந்துள்ளது.


கொழும்பில் இருந்து வெகு தொலைவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரம் மாதிவெல பாராளுமன்ற உறுப்பினர் குடியிருப்புகள் வழங்கப்படுவதுடன் இந்த வீடுகளை பராமரிக்க அரசாங்கம் வருடாந்தம் பல கோடி ரூபாவை செலவிடுகின்றது.


வெளியாட்களுக்கு வீடுகள் வழங்கக் கூடாது என எத்தனை சுற்றறிக்கைகள் கொடுத்தாலும், வீடுகள் தொடர்ந்து வழங்கப்படுகிறது என கூறும் அந்த வட்டாரங்கள்,எம்.பி.க்களின் சம்மதத்தின் பேரில் இவர்கள் தங்கியுள்ளதால் வெளியாட்களை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை அந்த அறிக்கையின்படி, எம்.பி.யின் உத்தியோகபூர்வ வீட்டுத் தொகுதியை நடத்துவதற்கான செலவும் இரட்டிப்பாகியுள்ளது.


கடந்த காலங்களில் இங்கு சில சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில் அவையில் எம்.பி,கள் அல்லாத வெளியாட்கள் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது.

No comments

Powered by Blogger.