ஆண்மையற்ற ஆட்சியாளர்களினால் பரிதவிக்கும் முஸ்லிம்கள்
- Âbû Ûmâr -
ஈரான் என்ற ஆண்மையுள்ள அரபு நாடு இல்லை என்றால் பலஸ்தீனம் இன்று இன்னும் சின்னாபின்னமாயிருக்கும்.
இறைவன் கொள்கையில் முரண்பட்டவர்களை கொண்டு அவனது இல்லத்துக்கான போராட்டத்தை நகர்த்துகிறான்.
பலஸ்தீனில் இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸின் போராட்டத்திற்கு ஆதரவாக ஈரான் உருவாக்கிய ஹிஸ்புல்லாவும், ஹூதிகளும் கலத்தில் தன்னாலான உதவியை செய்து வருகின்றனர்.
சவுதியும் , துருக்கியும் ஹமாசின் தலைவர்கள் லெபனானில் கொள்ளப்பட்டும் ஆண்மை இழந்து உரிய அறிக்கைகூட தயாரிக்க வக்கற்று நிற்பது பெரும் துயரை ஏற்படுத்துகிறது.
எகிப்தும் , கட்டாரும் ஆற்றும் எதிர்வினையை கூட சவுதி, துருக்கி போன்ற பலமான அரபு தேசம் ஆற்ற முடியவில்லை.
அரபு தேசத்தின் தலைவர்கள் கொள்கையில் பலஸ்தீனுக்கு ஆதரவு நிலையிலும் மக்களின் உணர்வுகளை சற்று தனிக்க வசூலும், ஆர்ப்பட்டமுமாக சொந்த நாட்டில் பலஸ்தீன ஆதரவை தனது அரசியலுக்கு பயன்படுத்தி கொண்டு. செயற்பாட்டில் இஸ்ரேலுக்கு வக்காலத்து வாங்கும் நிலையில் உள்ளனர், தற்சமயம் அரபுலக கல்ல மௌனம் வரலாற்றில் பெரும் அநியாயமாக பதிவாகும்.
தென் ஆபிரிக்கா சர்வதேச நீதிமண்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக வலக்கு தொடர்ந்திருக்கிறது என்ற செய்தி பலஸ்தீனுக்காக அரபுலகத்தில் எந்த ஒரு நாடுமற்றா ஒரு அபிரிக்க நாடு பலஸ்தீனுக்காக வலக்கு தொடர முன் வந்தது என்கிற கேள்விக்கு என்ன பதில் இருக்கிறது ? .
எந்த முன்மாதிரியான செயற்பாடும் செய்ய அரபு நாடுகள் முன்னின்று முனைய போவதில்லை என்பதை எடுத்து வைக்க கண்ணில் பல ஆதாரங்களை சம்பவங்கள் பதிவிக்கிறது.
இந்த யுத்தத்தில் ஹமாஸ் வென்றால் பலஸ்தீனில் ஷீஆக்களது ஆதிக்கம் அதிகரிக்கும் , ஏன் எனில் அரபு நாடுகளில் கொள்கை பேசும் நாடுகள் நவ துவாரத்தையும் அடைத்து கொண்டிருக்கும் போது பலஸ்தீனுக்காக உயிரையும் உடமையும் செலவு செய்து கலத்தில் இன்று நிற்பது ஷீஆக்கள் தானே ,
தோற்றால் ஈரான் மாத்திரம்தான் உலகில் பலஸ்தீனுக்காக குரல் கொடுக்கும் நாடு என்று உலகத்தில் ஷீஆக்களுடைய கொள்கை வேறூன்ற ஈரான் தனது பிரச்சாரத்தை முன்னிண்டு செய்யும்.
பொது மக்கள் மனதில் ஹூதிகள் , ஹிஸ்புல்லாக்கள், ஈரான் போன்ற பெயர்கள் தனது முனைப்பின் ஊடாக உயர் அந்தஸ்ததை பெற்று அதனூடாக ஷீஆக் கொள்கையை பிரச்சாரம் நடைபெரும் என்பதில் மாற்று கருத்தில்லை.
இவ் யுத்தத்தில் ஹமாஸ் வென்றாலும் தோற்றாலும் ஈரான் தனது கொள்கை பிரச்சாரத்தில் வெற்றி பெறும்.
அரபு தேசத்தின் ஆண்மை குறையால் பல கோடிகள், பல ஆண்டுகள் பிரச்சாரம் செய்ய வேண்டிய ஷீஆ கொள்கையை ஈரான் மிக இலகுவாக உரிய நேரத்தில் செய்கிறது.
அரபு நாடுகளில் துருக்கியின் ஆளுமையை ஈரான் உடைக்கிறது. இனி சவுதி ஒரு வகையிலும் வக்கற்ற ஒரு உலக இன்பம் நிறைந்த பணத்தினால் சாதிக்கும் இழுபரி நாடாகவே சமூகத்தில் அடையாளப்படும்.
அரபு நாடுகள் ஒன்றுபட வேண்டிய நேரத்தில் ஆண்மையற்ற ஆற்சியாளர்களினால் மக்கள் ஒரு புறமும் ஆட்சியாளர்கள் எதிர்புறமுமாக உணர்வுகள் பரிமாற்றப்படுகிறது.
அல்லாஹ் பலஸ்தீன மக்களை பாதுகாத்து அவர்களுக்காக சுதந்திரத்தை பெற அரபு தேசங்களை ஒன்றுபடுத்துவானாக.
Post a Comment