நான் இனவாதி அல்ல
தான் ஒரு இனவாதி அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கூறியுள்ளார்.
பௌத்தத்தை பாதுகாப்பதற்காக தான் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் இனத்துவம் என வரையறுக்கப்பட வேண்டுமென கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது தெரிவித்துள்ளார்.
இலங்கையிலுள்ள அனைத்து மக்களையும் நாட்டையும் தான் ஒரே விதத்தில் நேசிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இனவாதம், மதவாதம் மற்றும் பயங்கரவாதம் ஆகியவற்றை தற்போது பலர் ஒரு கலாச்சாரமாக பார்ப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளதோடு, இதன் அர்த்தங்களை சரிவர புரிந்து கொள்ளாது பலர் செயல்படுவதாக குறிப்பிட்டுள்ளார். இனவாதம் மற்றும் இனத்துவம் என்பது இரு வேறு விடயங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆம் நீர் இனவாதியல்ல,துவேசி, போலி பௌத்த வெறியன் போல் காட்டிக் கொண்டு தமிழ் , முஸ்லிம் சிறுபான்மையினரை இந்த நாட்டிலிருந்து துவம்சம் செய்யப்பட வேண்டும் என்ற இலக்கில் இயங்கும் வெறியன். இந்த உண்மையை இந்த நாட்டில்வாழும் சிறுபான்மையினர் மட்டுமன்றி சர்வதேச நாடுகளும் மிகவும் சரியாகப் புரிந்துவைத்துள்ளன. அதன் வௌிப்படை தான் கடந்த காலங்களில் அமெரிக்காவுக்குச் செல்லவிருந்த இலங்கைக்குழுவினைத் தலைமைதாங்கிச் செல்ல ஆயத்தமாக இருந்த உமக்கு ஐ.அமெரிக்கா விசா கொடுக்க மறுத்தது. வடக்கில் சிறுபான்மைத் தமிழர்கள் செறிவாக வாழும் பகுதிகளில் பலாத்காரமாக பௌத்த சிலைவைக்கவும், சிறுபான்மையினத்தவர்களின் காணிகளை பலாத்காரமாக கைப்பற்றி நீதிமன்றத் தீர்ப்புக்களையும் உதாசீனம் செய்துவிட்டு அங்கு சிங்களக் குடியேற்றங்களை பலாத்காரமாகக் குடியேற்றும் நாடகத்தை இயக்கியவர் நீர் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். இதையெல்லாம் பொதுமக்கள் மறந்துவிட்டதாக எண்ணிக் கொண்டு தேர்தல் வரவிருப்பதனால் உம்மை சுத்தமாகக் காட்டிக் கொள்ள நீர் மேற்கொள்ளும் எந்த பேச்சும் குறிப்பாக இலங்கை சிறுபான்மை மக்களிடமோ பொதுவாக உலக நாடுகள் மக்களிடமோ எடுபடாது. கோதாவின் சும்மா நிகங் டிக்கட்டில் பாராளுமன்றம் நுழைந்து எண்ணமோ பொதுமக்கள் உம்மை பாராளுமன்றம் அனுப்பிவைத்தது போல் நடிக்க எத்தனிக்கும் உமக்கு இதன் பிறகு பாராளுமன்ற பக்கத்துக்கூட வரமுடியாது என்பதை மாத்திரம் நினைவில் வைத்துக் கொள்ளும்.
ReplyDelete