Header Ads



ஹூ சத்தத்திற்கு அஞ்சும் நாமல்


எத்தனை சவால்கள், குற்றச்சாட்டுகள் வந்தாலும் கிராமங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இயங்கி வருவதாகவும், ‘ஹூ’ கூறும் அரசியல் கட்சிகளின் நோக்கம் பொதுஜன பெரமுனவை கிராமத்திற்கு வரவிடாமல் தடுப்பதே எனவும் நாமல் ராஜபக்ஷ இன்று (23) தெரிவித்துள்ளார். .


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தைரியமாக கிராமத்திற்கு செல்கிறது என்று கூறிய ராஜபக்ஷ, கொள்கை இல்லாத சில அரசியல் கட்சிகளுக்கு ‘ஹூ’ சத்தமிடுவதை தவிர வேறு வழியில்லை என்றும் குறிப்பிட்டார்.


ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை கிராமத்திற்கு வரவிடாமல் தடுப்பதற்கு அந்த தந்திரோபாயங்களை பயன்படுத்துவதாக கூறிய அவர் 1988 ஆம் ஆண்டு முதல் வீடுகளுக்கு தீ வைத்த கட்சிகள் பாராளுமன்றத்தில் இருப்பதாகவும், அவர்களின் தலைமைக்கு சவாலாக இருப்பவர்கள் ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிடுவதாகவும் கூறினார்

1 comment:

  1. ஹூ என்பது உம்மையும் உமது சகாக்களையும் வரவேற்கும் பாஷை. அதைத் தொடர்ந்து தான் பருப்பும் சோறும் கிடைக்கும். அதற்கு எமது கிராமத்து தாய்மார்கள் ஏற்கனவே தயார்நிலையில் உள்ளனர். அவர்கள் வரவேற்க சகல அவசியமானவற்றையும் எற்கனவே தயார்படுத்திவிட்டனர். நீரும் உமது அடிவருடிகளும் இனி ஓரிரண்டு கிராமத்துக்குச் சென்று வருவது நல்லது என அவர்கள் கருதுகின்றார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.