இறைவனின் அற்புதமான படைப்பு 'தகைவிலான் குருவி'
நாம் நடுகை செய்யும் பயிர்களை அழித்து நாசம் விளைவிக்கும் பூச்சிகள் பெருகும் பருவ காலத்தில் இக்கருவிகள் கூட்டம் கூட்டமாக நாடு விட்டு நாடு பறந்து வந்து வேளாண்மை நிலங்களில் பெருகும் பூச்சிகளை உட்கொள்வதால் பயிர்களை காக்கும் இயற்கை பூச்சி நாசனியாக திகழ்கின்றன.
இந்த சுறுசுறுப்பான குருவியும் இது போன்ற பல பறவை இனங்களும் இல்லையென்றால் தன்னிஷ்டத்துக்குப் பெருகும் பூச்சி வகைகளால் உணவுச் சங்கிலியில் பாரிய மாற்றங்கள் ஏற்படுவிடும், விளைவாக மானிடமாகிய நமது வாழ்வியல் சமநிலை பாதிக்கப்படும். மேலும் நிலமெல்லாம் பல அடி உயரத்துக்கு பூச்சிகள் பெருகி நமக்கு தொல்லை கொடுக்கும்.
இதில் வியக்கத்தக்க விடயம் யாதெனில்
பல்லாயிரக்கணக்கான மயில்கள் இடம் பெயர்ந்து வரும் இந்த குருவிக் கூட்டமானது, அதன் தலையில் படைத்தவன் இயல்பாக பொருத்தி வைத்த ஜிபி எஸ் தொழில்நுட்ப வசதியின் பயனாக மீண்டும்
அவைகள் ஏற்கனவே கூடு கட்டி வாழ்ந்த அதே இடத்திற்கு சென்று குஞ்சிகள் பொரிக்க சென்றுவிடுகின்றன.
புவியியல் சமநிலை பற்றி பின்வரும் வான் மறை வசனம் என்ன பேசுகிறது என்று படித்துப் பாருங்கள்.
و
(( மேலும் பூமியை நாம் விரித்து வைத்தோம், அதிலே உறுதியான, (அசையா) மலைகளை நிலைப் படுத்தினோம்; ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய அளவின்படி அதில் நாம் முளைப்பித்தோம்.))
📖 அல்குர்ஆன் : 15:19
✍ மாஹிர் பக்ஜா ஜி
✍ தமிழாக்கம்
Post a Comment