Header Ads



பொய்யான தகல்களை நம்பி ஏமாறாதீர்கள், ரணிலுடன் எங்களுக்கு எந்த டீலும் இல்லை.


ரணிலையும் சஜித்தையும் இணைக்க வெளிநாட்டு தூதுவர்களின் ஊடாக முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன என பல்வேறு ஊடகங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் போலி பிரசாரங்களுக்கு ஏமாற வேண்டாம் என்றும்,குறித்த செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்றும்,இதனை முற்றாக நிராகரிக்கிறேன் என்றுல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (12) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


உள்நாட்டு,வெளிநாட்டு பிரதிநிதிகளை பயன்படுத்தி சஜித்தையும் ரணிலையும் இணைக்க பெரும் அரசியல் தந்திரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சமூக வலைதளங்கள் மற்றும் சில ஊடகங்களில் பரப்பப்படுகின்றன.

வெளிநாடுகளின் ஆண்,பெண் தூதுவர்களும் அவ்வாறான முயற்சிகளில் ஈடுபடுகின்றனரெனவும் தகவல் வதந்திகள் பரப்பப்படுகின்றன.

எந்தவொரு வெளிநாட்டு ஆண் பெண் தூதுவர்கள் எமது நாட்டின் உள்ளக அரசியல் திருமணங்களுக்காக கதைத்ததில்லை.

கதைக்கப்போவதுமில்லை.சில தரப்பினர் பணத்தை செலவு செய்து ஊடகங்களை பயன்படுத்தி இவ்வாறான பொய்களை பரப்பி வருகின்றனர்.இவை முழுப்பொய்யாகும்.இந்த பொய்யை மக்களிடையே பரப்புவதை உடனடியாக நிறுத்துங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


ஐக்கிய மக்கள் சக்திக்கு பொது மக்களின் முழுமையான ஆசிர்வாதமும் ஆதரவும் இருப்பதால் அரசியல் டீல்கள் போட வேண்டிய தேவை எமக்கில்லை.வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் வலுவான கூட்டணியை ஐக்கிய மக்கள் சக்தி கிட்டிய எதிர்காலத்தில் அமைக்கும்.எங்கள் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அமைக்க நடவடிக்கை எடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.