Header Ads



தனது கிட்ணியை விற்று, போதைப் பொருள் வியாபாரம் செய்தவன்


- ரீ.எல்.ஜவ்பர்கான் -


பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரையின் கீழ் யுக்திய போதையொழிப்பு திட்டத்தின் கீழ் 5  கிராம் 440 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி. கஜநாயக்க தெரிவித்தார்.


860 மில்லி கிராம் கேரளா கஞ்சாவுடன் மற்றும் ஒருவர் அதே பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்தார். இதில் ஒருவர் தனது கிட்ணியை விற்று போதைப் பொருள் வியாபாரம் செய்து வந்தவர் என்றும் பொலிசார் தெரிவித்தனர்.


2 கிராம் 960 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் காத்தான்குடி அமானுல்லா வீதியில் வைத்து 32 வயது இளைஞர் ஒருவரும் 2480 மில்லி கிராம் ஐஸ் போதை பொருளுடன் புதிய காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து மற்றொரு இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதே நேரம் கர்பலா பிரதேசத்தில் வைத்த 880 மில்லி கிராம் கேரளா கஞ்சாவுடன் 48 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


2480 மில்லி கிராம் ஐஸ் போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட வரை ஏழு நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்யுமாறு மட்டக்களப்பு நீதிமன்ற உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய இருவரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது எதிர்வரும் ஆறாம் தேதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்எச்.எம் ஹம்சா உத்தரவிட்டுள்ளார்


இச் சம்பவங்கள் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.


No comments

Powered by Blogger.