"அரசியல் தீர்மானங்கள் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மூலமே அறிவிக்கப்படும், குடும்ப உறுப்பினர்கள் மூலம் அல்ல"
ஆங்கில இணையத்தளம் ஒன்றை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவிக்கையில்,
எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அவர்கள் எந்தவொரு அரசியல் தீர்மானங்களிலும் அங்கம் வகிக்கவில்லை. கட்சிக்கு எதிராக கூறப்படும் சர்ச்சைக்குரிய தேவையற்ற கருத்துக்களால் பொதுமக்களை தவறாக வழிநடத்த வேண்டாம்.
அரசியல் தீர்மானங்கள் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மூலமே பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும், குடும்ப உறுப்பினர்கள் மூலம் அல்ல. எனது உறவினரின் கருத்துக்களுக்கு நாங்கள் பொறுப்பு கூறமுடியாது. அவர்களை நேர்காணல் செய்வது நியாயமற்றது.
மேலும், தேவையற்ற கருத்துகளால் பொதுமக்களை தவறாக வழிநடத்த வேண்டாம். நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படுத்தப்படும் மாற்றங்களில் பொதுமக்கள் மீது சுமத்தப்படும் அதிக வரிகளுக்கு எனது கட்சி எதிரானது. மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் எனது கட்சி தொடர்ந்து பணியாற்றும் என குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment