குடும்ப அரசியல் இருந்து நாட்டைப் பாதுகாப்பதுடன் இனவாதம் மதவாதம் இல்லாத ஆட்சியாளர்களை உருவாக்க வேண்டும்.
- ரீ.எல்.ஜவ்பர்கான் -
எதிர்காலத்தில் லஞ்சம் மற்றும் ஊழல் அற்ற தூய்மையான அரசியல் கலாச்சாரத்திற்கு இளைஞர்களை தயார் படுத்துவதுடன் இனவாத மதவாத குடும்ப அரசியலில் இருந்து விடுபட்டு ஓர் தூய்மையான ஜனநாயக கலாசாரத்தை இளைஞர்களுக்கிடையில் வளர்த்தெடுக்க வேண்டும் . இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும் முன்னாள் தேர்தல் ஆணையாளருமான மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார் .
ஜனநாயக இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர் ஏற்பாடு செய்த மாகாண சபைகளை வலுப்படுத்தல் தொடர்பான இளைஞர் யுவதிகளுக்கு விளக்கமூட்டும் செயலமர்வு மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற போது அந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு விளக்கமளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
ஜனநாயக இளைஞர் காங்கிரஸ் தலைவர் கே.அர்ஜுனா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டனர்.
முன்னாள் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இளைஞர் யுவதிகள் மற்றும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.
Post a Comment