தேனிலவுக்காக பிணை - இலங்கையில் சம்பவம்
மவ்பிமவின் தகவலின்படி, 24 வயதுடைய சந்தேகநபர் வாதுவவைச் சேர்ந்த நபர் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.
இதனையடுத்து, சந்தேக நபரை 2024 ஜனவரி 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பாணந்துறை மேலதிக நீதவான் லஹிரு என் சில்வா உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர் தனது கோரிக்கையின் பேரில் நீதிமன்றத்தில் அறிக்கை செய்ததாகவும் ஆனால் தேனிலவுக்கு மத்தியில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாகவும் சந்தேகநபரின் நண்பர் சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
சந்தேகநபர் அண்மையில் திருமணம் செய்துகொண்டு தேனிலவின் போது நீதிமன்றில் ஆஜராகியமைக்கான சாட்சியங்களை முன்வைத்த சந்தேகநபரின் சட்டத்தரணி, மனைவி ஹோட்டலில் இருப்பதாகவும், இந்தச் சம்பவம் அவர்களது திருமண வாழ்க்கையை பாதிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேன்முறையீட்டை பரிசீலித்த பாணந்துறை மேலதிக நீதவான் சந்தேக நபரை 10000 ரூபா பிணையில் விடுவித்துள்ளார்.
Post a Comment