Header Ads



ஐஸ் மீன் வேண்டாம் என ஆர்ப்பாட்டம்


- இஸ்மதுல் றஹுமான் -


     நீர்கொழும்புக்கு ஐஸ் மீன் வேண்டாம் எனக்கு கோரி சிறிய வள்ள மீனவர்கள் ஆர்ப்பாட்ட பேரணியாக மீன் சந்தையை நோக்கிச் சென்றனர்.


        நீர்கொழும்பு கடற்கரை மீன் சந்தையில்  ஐஸ் மற்றும் பழுதடைந்த மீன்களை வெளியிலிருந்து கொண்டுவந்து, குறைந்த விலைக்கு விற்பனை செய்வதனால் சிறிய வள்ளங்களில் மீன்பிடிக்கும்  மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைகின்றன.  அதனால் அதனை நிறுத்தக் 


கோரி சிறு வள்ள மீனவர்கள் நேற்றுக் காலை கடற்றொழிலுக்குச் செல்லாமல் நீர்கொழும்பு கடற்கரை தெரு சாந்த செபஸ்தியன் தேவஸ்தானத்திற்கு முன்பாக ஒன்றுகூடி அங்கிருந்து பேரணியாக மீன் சந்தையை நோக்கிச் சென்றனர்.


    அங்கே இரு சாராருக்குமிடையே முருகல் நிலை ஏற்பட்டது. அங்கு இரு மீனவர் பிரிவினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தபோதும் முடிவு எட்டப்பவில்லை.


 கடற்கரை தெரு சாந்த செபஸ்தியன் தேவஸ்தானத்தில் பங்குத் தந்தையின் தலைமையில் இரு சாராரினதும் கடற்றொழில் சங்கங்களின் பங்குபற்றலுடன் பேச்சுவார்த்தை நடாத்த தீர்மாணிக்கப்பட்டதை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியாக கலைந்து சென்றனர். 

No comments

Powered by Blogger.