நாம் எவ்வளவு, பலவீனமான பிறவிகள் தெரியுமா..?
நாம் உயிர் வாழ உணவுகளை நாமா செரிமானத் தொகுதியில் ஜீரணிக்க வைக்கிறோம்? சத்துக்களை நாமா உறிஞ்சி எடுக்கிறோம்?
நாம் உட்கொள்ளும் உணவுகளின் கலோரிகளை எரிக்க நம் சுவாசத்திலிருந்து வரும் ஆக்ஸிஜனை இரத்தத்தில் நாமா கரைக்கிறோம்?
நம் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை சுத்திகரிக்கும் பணியை செவ்வனே செய்யும் நம் சிறுநீரகங்களை நாமா இயக்குகிறோம்...?
நம் உடலில் 500 க்கும் மேற்பட்ட நுணுக்கமான செயல்பாடுகளை செய்யும்
கல்லீரலை நாமா இயக்குகிறோம்...?
நம் தலையிலுள்ள மூளையை கேட்கவும், பார்க்கவும், கணிப்பிடவும் செய்வது நாமா.?
இப்படி பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது...!
நம் உடல் செயல்பாடுகள் யாவும் துல்லியமாக நமக்காக நிகழ்ச்சி நிரல் செய்து கொண்டிருக்கிறது. நாம் எந்த வழிகளும் அற்ற, எந்த வலிமைகளும் அற்ற பலவீனர்கள் என்பது தெரியுமா?
நம் உடம்பில் இருக்கும் ஒரு லட்சம் பில்லியன் செல்களில் ஒரே ஒரு செல் மட்டும் கட்டுக்கடங்காமல் கிளர்ச்சி செய்து, பெருக ஆரம்பிக்குமானால் நாம் கொடிய புற்றுநோய்க்கு பழியாகிவிடுவோம் என்பது தெரியுமா?
கர்வமாக நடக்க நம்மிடம் என்ன இருக்கிறது? ஆணவாம நடக்க நாம் யார்?
((உங்களுக்குள்ளும் (பல சான்றுகள்) உள்ளன. சிந்திக்க மாட்டீர்களா?))
📖 அல்குர்ஆன் / 51 - 21
✍ மஹிர் பக்ஜாஜி
✍ தமிழாக்கம் / imran farook
Post a Comment