Header Ads



பெரிய மீன்களை பிடியுங்கள் - சம்பிக்க அறிவுரை


பெற்றோர்கள் இருவரும் கைது செய்யப்படும்போது, ​​அவர்களது வீடுகளில் பாதுகாப்பற்ற நிலையில், சிறுவர்கள் பாதாள உலகத்தில் சேர்வததற்கும், பெண்களை விபச்சாரத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதற்கும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் ‘யுக்திய’ நடவடிக்கை வழிவகுக்கின்றது என  ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நேற்று (03) தெரிவித்துள்ளார்.


"அறிக்கைகளின்படி, கொழும்பு பகுதியில் பல பெற்றோர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் குழந்தைகள் சிக்கித் தவிக்கின்றனர், அவர்களுக்கு உணவு மற்றும் பாதுகாப்பு வழங்க யாரும் இல்லை. சட்டத்தரணியை ஒழுங்கு செய்ய பணம் இல்லை.


"இன்னும், போதைப்பொருள் விநியோகத் தொழிலின் முக்கிய புள்ளிகளை பொலிஸார் கைது செய்ததாக எங்களுக்கு எந்த செய்தியும் வரவில்லை. முக்கிய சந்தேக நபர்களின் பெயர்கள் பெரும்பாலும் ஊடகங்களில் அறிவிக்கப்பட்டன. ஆனால் அந்த பெரிய மீன்கள் பொலிஸாரால் பிடிக்கப்படுவதைப் பார்க்க நாங்கள் காத்திருக்கிறோம்.


கடந்த நாட்களில் புல்டோசர்களை பயன்படுத்தி கடற்கரையில் உள்ள விடுதிகளை பொலிஸார் அழித்ததை பார்த்தோம்.கடற்கரையில் உள்ள அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க கடலோர பாதுகாப்பு துறைக்கு முழு அதிகாரம் உள்ளது.அவற்றை அகற்ற நீதிமன்ற உத்தரவு பெற வேண்டும்.


தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை அகற்றி, அந்த கட்டுமானங்கள் போதைப்பொருள் வியாபாரத்தில் சம்பாதித்த பணத்தில் கட்டப்பட்டதாக கூறுவது சட்டத்திற்கு எதிரானது," என்று அவர் மேலும் கூறினார்.


தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் ஹோட்டல்களை இடிக்கத் தெரிவு செய்வதற்கும் வேறு சில ஹோட்டல்களை தமது தொழிலைத் தொடர அனுமதிப்பதற்கும் இடையில் முக்கியமான தொடர்பு இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ரணவக்க சுட்டிக்காட்டினார்.


எனவே, 'யுக்திய' நடவடிக்கையின் முடிவு குறித்து ஆழ்ந்த கவனம் செலுத்துமாறு ஜனாதிபதியிடம் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.

1 comment:

  1. பெரிய மீன்களைப் பிடிக்கத் தொடங்கினால் இலங்கை அரசியல் அதன் தற்போதைய அர்த்தத்தை இழந்து எந்தப் பொருளும் அற்றதாக அது மாறிவிடும்.

    ReplyDelete

Powered by Blogger.