"அல்லாஹ்வின் உதவி மட்டும்தான் உள்ளது"
எகிப்து, சிரியா,ஈராக் ஜோர்தான்,லெபனான் ஆகிய இராணுவத்தை வெறும் ஆறே நாட்களில் தோற்கடித்தது இஸ்ரேல்.
அரபு நாடுகள் பெரும் நிலப்பரப்பை பறிகொடுத்தன. தெற்கே 300 கிலோ மீட்டர், கிழக்கே 60 கிலோ மீட்டர், வடக்கே 20 கிலோ மீட்டர் அரபு நிலம் இஸ்ரேலினால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது.
ஆனால் வெறும் 41 கிலோ மீட்டர் நீளமும் 9 கிலோ மீட்டர் அகலமும் கொண்ட காஷாவை தனது கட்டுப்பட்டுக்குள் கொண்டு வர 100 நாட்கள் ஆகியும் இயலாமையால் பொதுமக்களை படுகொலை செய்து தனது விரக்தியை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறது இஸ்ரேல்.
விமானங்கள் இல்லை விமானப்படை இல்லை.. கடற்படை இல்லை. கப்பல்கள் இல்லை, தாங்கிகள் இல்லை.
பணப்பலம் இல்லை..
பெட்ரோல் வளம் இல்லை. ஆனாலும் போராளிகள் களைத்து விடவில்லை.
காஷாவில் இஸ்ரேலிய படைகளுக்கு நிம்மதியாக இருக்க முடியவில்லை. உலகம் முழுவதும் ஹாலிவூட் படங்களிலும் கேம்களிலும் ஒரு அதிரடி இராணுவமாக காட்டப்பட்டு வந்த ஒரு இராணுவத்தின் இமேஜ் இப்போது காறித்துப்பும் அளவுக்கு மாறி விட்டது.
மேற்குறிப்பிட்ட அனைத்து பலமும் இருந்தும் ஆறு நாட்களில் ஐந்து இராணுவங்களை தோற்கடித்த இஸ்ரேலுக்கு. நூறு நாட்கள் ஆகியும் ஒரு சிறிய போராட்ட இயக்கத்தை வெற்றி கொள்ள முடியவில்லை என்றால் அங்கே ஆயுதங்கள் இல்லை, ஆட்பலம் இல்லை, அல்லாஹ்வின் உதவி மட்டும்தான் உள்ளது என்பது தெளிவாகிறது.
அவர்களை நமது ஒவ்வொரு துஆக்களிலும் சாளைக்காமல் சேர்த்துக்கொள்ள மறந்து விடாதீர்கள்..
-அய்யாஷ்
Post a Comment