எலோன் மாஸ்க்கும், ஸகாத் வரியும்
இதிலிருந்து இஸ்லாம் கூறும் ஸகாத் வரி எடுக்கப்படுமானால் சுமாராக 4 பில்லியன் டாலர்கள் வரும். வீடு வசதியற்ற சுமார் ஒரு மில்லியன் மக்களுக்க சகல வசதிகளுடன் வசிக்க பிரமாண்டமான ஒரு நகரத்தை உருவாக்கலாம்.
கற்பனை செய்து பாருங்கள்!
முஸ்லிம் உலகிலுள்ள பல்லாயிரக்கணக்கான கோடிஸ்வரர்கள் மாத்திரம் இந்த ஸகாத்தை சீரான முறையில் வழங்கினால் இந்த மண்ணில் ஏழைகள் இருப்பார்களா?
ஆனால் அவர்கள் எல்லாம் ஆண்டுக்கு 2.5% மட்டுமே ஆகும் ஸகாத்தை செலுத்தாமல், அரசுகளுக்கு ஒவ்வொரு மாதமும் (23%) வரியை செலுத்துகிறார்கள், இது ஸகாத்தை விட கிட்டத்தட்ட பத்து மடங்கு அதிகமானதாகும். அதில் பெரும்பாலான நிதிகள் அழித்தொழிக்கும் போர்களுக்கும் அனாவசிய திட்டங்களுக்குமே செல்கின்றன.
படைத்தவன் வரைந்த பொருளாதாரமா?
படைப்பினம் வகுத்த பொருளாதாரமா?
எது ஏற்புடையது என்று மனிதன்தான் தீர்மானிக்க வேண்டும்!!
-Imran farook-
Post a Comment