Header Ads



இம்தியாஸ் குறித்து பகிரப்படும் போலித் தகவல்


- அன்ஸிர் -


பாராளுமன்ற உறுப்பினர்களான, வைத்தியர் சன்ன ஐயசுமன, இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஆகிய இருவரையும் தொடர்புபடுத்தி சமூக ஊடகங்களில் சில செய்திகள் வெளியாகியிருந்த.


அதாவது, முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எறியூட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஸவிற்கு மருத்துவ ஆலோசனை வழங்கி ஐயசுமனவை ஐக்கிய மக்கள் சக்தியில் இணைத்துக் கொள்வதாக இருந்தால், இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் Mp, அரசியலில் இருந்து ஒதுங்க முடிவு செய்துள்ளதாக அவரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர் தெரிவிப்பு என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.


எனினும ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கிடைத்த, மிகவும் நம்பகரமான வட்டாரத் தகவல்களின் படி, சஜித்  பிரேமதாசாவிடம் இம்தியாஸ் அப்படி ஒரு கோரிக்கையை முன்வைத்தார் என அவரது அரசியல் எதிரிகள் இவ்வாறான கதையொன்றை பரப்பி விட்டுள்ளனர்.


முழு இலங்கையிலும், கட்சி தலைமையிடமும், கட்சி வட்டாரங்களிலும், முஸ்லிம் சமூகத்திலும் தனக்கென தனியிடம்  பிடித்து தூய்மையான அரசயில் பணிகளை முன்னெடுக்கும் இம்தியாஸ் மீது, சேறு பூசவும், கட்சித் தலைமையுடன் முரண்பாடுகளை மூளச்செய்யவுமே இவ்வாறான போலிச் செய்திகள் பரவ விடப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.


அதேவேளை, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர், சன்ன ஜயசுமனவை ஐக்கிய மக்கள் சக்திக்குள் உள்ளீர்க்க கூடாது ன்ற நிலைப்பாட்டில் உள்ளதாகவும், இதுதொடர்பில் சஜித் தரப்பு இதுவரை எந்தவொரு உறுதியான நிலைப்பாட்டிற்கும் வரவில்லை எனவும் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு நம்பகத் தகுந்த அரசயில் வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments

Powered by Blogger.