Header Ads



மருமகளை இழந்த, ஒரு மாமாவின் வேதனை


லாரன் அல்-கௌமி Lauren Al-Koumi டிசம்பர் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டார்.


அவரது மாமா அக்ரம் ஹாசன் எழுதினார்:


'நீண்ட கால எதிர்பார்ப்புக்கு பின், அவள் கிடைத்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம் 


நான் மாமாவாக மாறினேன்


லாரன்,  இதயங்களைக் கொள்ளையடிக்கும் சிரிப்ழகி, "குடும்பப் பழம்" என்று அவளுடைய தாத்தா அன்புடன் அழைத்தார். 


அவள் குடும்பத்தின் அனைத்து குழந்தைகளுடன் விளையாடுவதிலும், உலாவதிலும் மகிழ்ந்தாள்.


ஒருவேளை அவள் தன் தந்தையைப் போல ஒரு பொறியாளராகவோ அல்லது தன் தாயைப் போல ஒரு ஆசிரியராகவோ வளர வேண்டும் என்று கனவு கண்டிருக்கலாம், 


ஒருவேளை அவள் வளர்ந்திருந்தால், அவள் அழகின் சின்னமாக மாறியிருக்கலாம். 


சாத்தியக்கூறுகள் ஏராளம், 


ஆனால் இஸ்ரேலியப் ஆக்கிரமிப்பாளரால் உருவாக்கப்பட்ட அடக்குமுறை இயந்திரம் அவளுக்கு துரோகம் இழைத்தது, அவளுடைய அப்பாவி குழந்தைப் பருவத்தை சூறையாடியது, அவளுடைய சிரிப்பை எங்களிடம் இருந்து பறித்தது, மேலும் அவளை என்றென்றும் தொடும் வாய்ப்பை எனக்கு மறுத்தது."

No comments

Powered by Blogger.