மக்களுக்கு தெளிவில்லாமல் அவசர அவசரமாக இயற்றப்படும் சட்டங்கள்
நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தில் அடங்கியுள்ள விடயங்கள் தொடர்பில் மக்கள் அறிந்துள்ளார்களா என Verité Research நிறுவனம் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது.
சட்டமூலத்தில் அடங்கியுள்ள விடயங்களை தாம் அறிந்திருக்கவில்லை என கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 66% பேர் தெரிவித்துள்ளனர்.
எனினும், 34% பேர் அதனை அறிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
நிகழ்நிலை காப்பு சட்டத்தால் சமூக ஊடகங்களை மக்கள் சுதந்திரமாக பாவிப்பது முடக்கப்படும் என 56% பேர் கூறியுள்ளனர்.
எனினும், 19% பேர் இந்த சட்டமூலம் சமூக ஊடகங்கள் தவறாக பாவிக்கப்படுவதை குறைக்கும் என கருத்துக்கணிப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
Post a Comment