"இரத்தம் சிந்துவதை நிறுத்து" - டெல் அவிவில் மக்கள் ஆர்ப்பாட்டம்
டெல் அவிவில், நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் "இரத்தம் சிந்துவதை நிறுத்து" என்ற பதாகையை ஏந்தியதோடு, காசாவில் சிறைபிடிக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்கான ஒப்பந்தத்தைக் கோரும் போராட்டத்தின் போது சாலை மறியல் செய்தனர்.
"நாங்கள் அரசாங்கத்திடம், 'இது போதும்' என்று சொல்ல வந்தோம். பணயக்கைதிகள் அனைவரும் வீடு திரும்ப வேண்டும், இப்போது போர் நிறுத்தம் வேண்டும்,'' என்று எதிர்ப்பாளர் சபீர் ஸ்லஸ்கர் அம்ரான் கூறினார்.
"இராணுவ தீர்வு இல்லை, இராஜதந்திர தீர்வு மட்டுமே - ஒப்பந்தங்கள் மட்டுமே பணயக்கைதிகளை மீண்டும் கொண்டு வரும்."
எவ்வாறாயினும், பிரதம மந்திரி நெதன்யாகு, போர் தொடரும் என்பதில் உறுதியாக இருக்கிறார், புதன்கிழமை பாராளுமன்றத்தில் ஹமாஸின் "ஆக்கிரமிப்பு மற்றும் தீமை" அழிக்கப்படும் வரை சண்டை தொடரும் என்று கூறினார்.
Post a Comment