Header Ads



கடும்போக்கு மதங்களை பின்தொடரத் தேவையில்லை


 கடும்போக்குவாத மதங்களை பின்தொடர வேண்டாம் என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் கோரியுள்ளார்.


அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற சில கூட்டுத் தற்கொலைச் சம்பவங்கள் மத போதகர் ஒருவரின் போதனைகளினால் ஏற்பட்டதா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


குறித்த கூட்டுத் தற்கொலைச் சம்பவங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.


“உயிரை மாய்த்துக் கொள்வது பாவ செயல் என பௌத்த தர்மத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு உதவுதலும் பாரிய பாவச் செயல் என பௌத்த தர்மம் கூறுகிறது.


இந்நிலையில், நாம் தர்ம மார்க்க நெறியில் பணிக்க வேண்டும். கடும்போக்குவாத மதங்களை பின்தொடர்ந்து பெறுமதியான உயிர்களை அழித்துக் கொள்ளத் தேவையில்லை. 


காளான் முளைப்பது போன்று உருவாகும் மதக் கும்பல்கள் மத போதகர்கள் தொடர்பில், மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும்” என்றார்.

1 comment:

  1. அப்பாவி மனிதர்கள் பௌத்த மதம் என்ற பெயரில் வழிகெட்ட கூட்டங்களை அப்பாவி மக்கள் பின்பற்றுவதற்கு நீர் மிக முக்கியமான வழி கேடன். உம்மால் தான் பௌத்த மதத்துக்கும் ஏ னைய மதங்களுக்கும் அநியாயம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

    ReplyDelete

Powered by Blogger.