Header Ads



பிரசன்னவின் சொற்பொழிவுகளை கேட்டவர்கள், வீடுகளில் இருந்தால் அவதானம்


மக்களின் முட்டாள்தனமான செயற்பாடு குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ எச்சரித்துள்ளார்.


கொழும்பின் புறநகர் பகுதியில் விஷம் அருந்தி மரணமடைந்த ருவன் பிரசன்ன குணரத்னவின் சொற்பொழிவுகளை கேட்டவர்கள் வீடுகளில் இருந்தால் மிகவும் அவதானமாக இருக்குமாறு இந்த நபர் பல நாடுகளில் சொற்பொழிவுகளை நடத்தியுள்ளதாகவும், இவரது சொற்பொழிவுகளை கேட்ட பலர் உயிரை மாய்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


இது தொடர்பில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். உயிரை மாய்த்த சர்ச்சைக்குரிய நபர், தனது விரிவுரைகளில் தான் அமானுஷ்ய விஞ்ஞானம் படித்ததாக கூறியதாகவும், ஆனால் அவர் அவ்வாறான பாடம் அல்லது சமய சித்தாந்தங்களை கற்கவில்லை என தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


அத்துடன், மாதாந்தம் ஒரு லட்சத்து 50000 ரூபாவை செலுத்தி ஹோமாகம அடுக்குமாடி குடியிருப்பில் வாடகை அடிப்படையில் வீடொன்றை எவ்வாறு பெற்றுக்கொண்டார் என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.