குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளும் நிலையை நாடு எட்டியுள்ளது - சஜித்
அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்க VAT அதிகரிக்கப்பட்டாலும்,அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்க ஒரே வழி VAT ஐ அதிகரிப்பது அல்ல,மாறாக நாட்டிலிருந்து திருடப்பட்ட பணத்தை நாட்டிற்கு திரும்பப் பெறுவதற்கான கட்டமைப்பை ஸ்தாபிப்பதே பொறுத்தமான வழி என்றும்,திருடர்களை நம்பி ஜனாதிபதி,பிரதமர் போன்ற பதவிகளைப் பெற்றதாலயே தற்போதைய அரசாங்கத்தால் அதனை மேற்கொள்ள முடியாதுள்ளதாகவும்,எனவே திருடர்களைப் பிடிப்பதற்குப் பதிலாக திருடர்களைப் பாதுகாத்து வரும் வேளையையே தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 59 ஆவது கட்டமாக கம்பஹா புத்பிட்டிய மகா வித்தியாலயத்திற்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் இன்று (02) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி குப்பிகள் உள்ளிட்ட மருந்துத் துறையில் சமீபத்தில் நடந்த திருட்டு,ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பாக சுகாதார அமைச்சருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்த போது, அதனை தோற்கடிக்க 113 உறுப்பினர்கள் கை தூக்கீனர் என்றும்,அவர்களும் இந்நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்ற திருடர்கள் கூட்டமே என்றும்,அவர்கள் திருடிய வளங்களை மீண்டும் எமது நாட்டிற்கு கொண்டு வர முடியுமாக இருந்தால், இவ்வாறு வரியை அதிகரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
பிரபஞ்சம் மற்றும் மூச்சுத் திட்டங்கள் அரசியல் வாக்குறுதிகளாக மேற்கொள்ளப்படவில்லை என்றும்,இவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுக்காமல் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தும் வேலையை மட்டும் செய்வதற்கு எதிர்க்கட்சிக்கு சந்தர்ப்பம் இருந்தாலும், அவ்வாறு செய்யாமல்,
மக்களுக்காக நடைமுறை ரீதியான அபிவிருத்தியின் மூலம் தனது திறனை நிரூபிக்க ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுப்பை மேற்கொண்டதாகவும் அவர்
மேலும் அவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியினால் அமுல்படுத்தப்படும் மூச்சுத் திட்டத்தின் கீழ் 56 அரச வைத்தியசாலைகளுக்கு 171,966,900.00 ரூபா பெறுமதியான வைத்தியசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.பிரபஞ்சம் பஸ் திட்டத்தின் கீழ் 80 அரச பாடசாலைகளுக்கு 50 இலட்சம் ரூபா பெறுமதியான 80 பாடசாலை பஸ்கள் வழங்கப்பட்டுள்ளதோடு 389,200,000.00 ரூபா இதற்காக செலவிடப்பட்டுள்ளது.
பிரபஞ்சம் ஸ்மார்ட் வகுப்பறைகள் திட்டத்தின் கீழ் 59 அரச பாடசாலைகளுக்கு 562 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment