பிக்குகள் தொடர்பில் சர்வதேசத்தில் தவறான நிலைப்பாடு உள்ளது - விஜேதாச
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (09) தேசிய ஒற்றுமைக்கும்,நல்லிணத்துக்குமான அலுவலகச் சட்டமூலம்,தேசிய நீரளவை சட்டமூலம் என்பனவற்றை சமர்ப்பித்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் என்பது இன்று நேற்று ஆரம்பமான பேசுபொருளல்ல,முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஆட்சியில் யுத்த சூழலின் போது இந்த அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.அப்போது நிர்வாக மட்டத்தில் மாத்திரம் அந்தஸ்த்து வழங்கப்பட்டது.தற்போது அரசியலமைப்பின் ஊடாக அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சமூக கட்டமைப்பில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை ஸ்தாபிப்பதுடன் பாராளுமன்றத்திலும் ஒற்றுமை,நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த வேண்டும்.ஒருசிலரது முறையற்ற செயற்பாடுகளினால் 225 எம்.பி.க்களையும் மக்கள் வெறுக்கிறார்கள். இந்நிலைமையை மாற்ற வேண்டும்.
முன்பு கிராமங்களில் இன நல்லிணக்கம் சிறந்த முறையில் இருந்தது.ஆனால் தற்போது கிராமங்கள் இனம்,மதம் மற்றும் அரசியல் ரீதியில் பிளவுப்பட்டுள்ளன .பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் தேசிய நல்லிணக்கத்தை ஸ்தாபிப்பது குறித்து புலம்பெயர் தமிழ் அமைப்புகள் அண்மையில் ஜனாதிபதி உட்பட மத தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன . ஒரு தரப்பினர் இதற்கு சாதகமாக பேசியுள்ள நிலையில் பிறிதொரு தரப்பினர் விமர்சிக்கின்றனர் என்றார்.
Post a Comment