ஜனாதிபதி தேர்தலில் ரணில் போட்டியிடுவார், தம்மிக பெரேரா சிறந்த வர்த்தகர், அரசியல் தெரியாது
- இஸ்மதுல் றஹுமான் -
ஜனாதிபதி முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டத்தினால் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவார் என பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா முன்னணி வர்த்தக பிரமுகர்களை சந்தித்தபின் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் கூறினார்.
நிமல் லான்சா தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் நான் தெளிவாகச் செல்லுவது முதலில் வருவது ஜனாதிபதி தேர்தலே. அதில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவார் என எமக்கு பாரிய நம்பிக்கை உள்ளது.
விழுந்த நாட்டை கட்டியெழுப்புவது தொடர்பாகவும் இந்த முறைமை தொடர்ந்து எடுத்துச் செல்லும் போது பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. கைவார் பேசுபவர்களும் பொய் சொல்பவர்களும் ஒவ்வொன்றைச் சொல்லும் போது நாடு பின்னடையும். அதனால் ஜனாதபதி
ரணிலை போட்டியிடுமாறு மக்கள் கருத்து மேலோங்கியுள்ளது.
தம்மிக பெரேரா சிறந்த வர்த்தகர். அவருக்கு வியாபார அறிவு இருந்தாலும் அரசியல் அறிவு இல்லை. அவரை ஜனாதிபதி அபேட்ச்சகராக வருவதற்கு மொட்டுக் கட்சி 10 நிபந்தனைகள் விதித்துள்ளதாக கூறுகின்றார். ஆனால் மொட்டுக் கட்சினர் அப்படி கூறியதாக எந்த உறுப்பினர்களும் சொல்லவில்லை. யாரோ அவருக்கு எதிர்பார்ப்பை ஊட்டியுள்ளனர். அவ்வாறு நம்பிக்கையை ஏற்படுத்தியவர் நாம் தம்மிக பெரேராவை ஜனாதிபதி அபைட்ச்சகராக்குவோம் எனக்
கூறவேண்டும். அவ்வாறு ஒன்றும் இதுவரை தெளிவில்லை. எனக்குத் தெரிந்த மொட்டு எமது அபேட்ச்சகர் தம்மிக பெரேரா என்று கூற அவசரப்படமாட்டாது.
நாம் ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதாரத் திட்டத்திற்கு ஆதரவு வழங்குவோம். எமது வேலைத் திட்டத்தில் வேறு எந்த வேட்பாளர் தொடர்பாகவும் நம்பிக்கை இல்லை.
மொட்டு, ராஜபக்ஷாக்கள் அவர்களுடன் உள்ளவர்கள் கள்வர்கள் என ஐக்கிய மக்கள் சக்தி கடந்த காலங்களில் கூறினார்கள். பொருளாதார வீழ்ச்சிக்கு ராஜபக்ஷாக்கள் எடுத்த தீர்மாணமே எனக் கூறப்பட்டது. அப்படியானல்
ஐமச இடம் கேட்பது ஜீ.எல். பீரிஸ், நாலக கொடகேவா போன்றவரகளை
எடுத்தது உடை அனிந்துகொண்டா? நாலக கொடஹேவாதான் கோத்தாபையின் வலது கை. பொருளாதாரம் வீழ்ச்சியடைய வரி குறைக்க பிராதன ஆலோசனை வழங்கியவர் நாலக கொடஹேவா. வியத்மக, எளிய அமைப்புக்களை ஏற்படுத்தி அரசியல் செய்யாதவர்களை பாராளுமன்றம்
கொண்டுவர கருத்தை உறுவாக்கியது இவர்களே. நாம் அப்போது கூறினோம் கோதாபயவுக்கு அரசியல் செய்யமுடியாது என்று. அதனை மக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. என்றாலும் கோத்தாபயவை கொண்டுவந்து எமது 30 வருட அரசியலை இல்லாமலாக்கிய நாலக கொடஹேவ ஐக்கிய மக்கள் சக்திக்கு கரனமடித்தார். சஜிதும் அன்புடன் தழுவிக்கொண்டனர். ஜீ.எல். மொட்டின் தவிசாளர். நான் அரகலயவுக்கு முன் வெளியேறினேன். அவர்கள் அரகலயவினால் வெளியே ற்றபட்டவர்கள்.
சர்வதேச இறையான்மை பத்திரங்களை செலுத்தாமல் இருக்க முடியுமென மக்கள் விடுதலை முன்னணியின் பொருளாதார நிபுனர்கள் கூறுவதாயின் அவர்களின் அறிவு அவ்வளவுதான். ம.வி.முன்னணிக்கு முடியாது என்பதை
நாடு தொடர்பாக அறிவுள்ளவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். மவிமு மற்றவர்களிடம் வாங்கி, மற்றவர்களை தங்கி வாழ்பவர்கள்.
அநுர குமார், விஜித்த ஹேரத், சுனில் ஹதுநெத்தி ஆகியோருக்கு தொழில், வியாபாரம் உண்டா? இல்லை. தனியார
நிறுவனங்களில் தொழிற்சங்கங்களை அமைத்து கப்பம் பெறுகிறார்கள். அரச நிறுவனங்களில் வேலை செய்ய விடுவதில்லை.
70 வருடங்களாக நாட்டை நாசமாக்கியதாக அவர்கள் கூறுகின்றனர். 20 வருடங்கள் நாசமாக்கியது அவர்கள். 30 வருடங்கள் பிரபாகரன் நாசமாக்கினார். மிகுதி 20 வருடங்கள் கல்வி சீர்திருத்தம் மின்சார மறுசீறமைப்பு செய்ய இடம் விடவில்லை.
மின்சார சபையின
நஷ்டத்தை குறைத்தால் 20 இலட்சம் பேருக்கு 10 ஆயிரம் ரூபா வீதம் வழங்க முடியும். அதற்கும் மக்கள் விடுதலை முன்னணி தொழிற்சக்கங்கள் இடம்விடுவதில்லை.
வங்கியில் கடன் எடுக்காத வியாபாரம் செய்யாத கடை ஒன்றைக்கூட நடத்தாத இவர்கள் தான் பொருளாதாரத்தை முன்னேற்ற விரிவுரை நிகழ்துகின்றனர்.
வற் மற்றும் வரி அதிகரிப்பால் மக்களுக்கு பாரிய நெருக்கடி உள்ளன. அதனை மக்களுக்கு தாங்கமுடியாது. கோதாபயவின் வரி குறைப்பால் எரிபொருள், மின்சார நெருக்கடி ஏற்பட்டது. மக்கள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் நின்றனர். மருந்துகளை இறக்குமதி செய்யமுடியாத நிலை. ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி அந்நியச்செலவனி இல்லாமல் போனது இதனால் அரகலய வந்து கோதாபயவையும் அரசையும் விரட்டினார்கள்.
தற்போது ரணிலுக்குச் சொல்வதும் வரியைக் குறைத்து நாட்டின் பொருளாதாரத்தை வீழ்த்தி பழைய நிலைக்கு நாட்டை கொண்டுவரச் சொல்லியா எனக்கு கேட்டார்.
Post a Comment