Header Ads



ஸ்ரீலங்கா டெலிகொம் இந்தியாவுக்கா..? சீனாவுக்கா..??


ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை பெறுவதற்கு சீன மற்றும் இந்திய நிறுவனங்கள் தகுதி பெற்றுள்ளதாக நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு அறிவித்துள்ளது.


அவை சீனாவின் Gortune International Investment Holdings மற்றும் இந்தியாவின் Jio Platforms ஆகிய நிறுவனங்கள்.


ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமான 50.23% பங்குகளை விற்பனை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.


இந்தியாவின் Jio Platforms மற்றும் சீனாவின் Gortune International Investment Holdings மற்றும் இங்கிலாந்தின் லைகா குழுமத்தின் பெட்டிகோ கொமர்சியோ இன்டர்நேஷனல் ஆகியவை டெலிகாம் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை வாங்க முன்வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.