Header Ads



பெண் படுகொலை - சந்தேக நபர் விமான நிலையத்தில் கைது


நூற்றுக்கணக்கான மக்கள் காத்திருந்த வேளையில் காரில் வந்த சந்தேகநபர் ஒருவர் கஹதுடுவ அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் சிவில் விமான சேவையின் பெண் உத்தியேகத்தர்  குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.


காயமடைந்த  பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  நிலையில்  உயிரிழந்தார். சம்பவத்தில்  பிலியந்தலை, மடபட, ஜபுரலிய பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 39 வயதான ஒரு குழந்தையின் தாயான சிவில் விமான சேவை அதிகாரி துலாஞ்சலி அனுருத்திகா என்ற ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,


உயிரிழந்த பெண் வைத்தியர் ஒருவரின் மனைவி என்றும் , சிவில் விமான சேவை அதிகார சபையில் பணியாற்றுபவர் எனவும் கூறப்படுகின்றது.


இந்நிலையில்  பெண்  தனது முடித்துக் கொண்டு அலுவலக சேவை பேருந்தில் மென்ஹோ ரண கொழும்பு வீதிக்கு வந்து, ஹொரணை கொழும்பு வீதிக்கு வந்து கொண்டிருந்தார்.


இதன்போதுபோது காரில் வந்த நபர் ஒருவர்  கத்தியால்  பெண்மீது  குத்தியதாக  பொலிஸார் தெரிவிக்கின்றனர். அத்துடன் தாக்குதலை நடத்தியவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.


 சம்பவத்தில்   பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.


கஹதுடுவ அதிவேக வீதி நுழைவாயிலில் இருந்து மென்ஹோ ரண கொழும்பு வீதிக்கு பஸ்ஸில் வந்த போது காரில் வந்த நபர் ஒருவர் அவரது கழுத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


அதோடு சந்தேகநபர்  விசா ஆலோசனை நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி, பம்பலப்பிட்டியில் உள்ள பிரபல வர்த்தக நிலைய கட்டிடம் ஒன்றில் அவரது அலுவலகம் அமைந்துள்ளது.


 இந்நிலையில்  கொலையாளி நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட சமயத்தில் இன்று (10) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக்ல பொலிஸார் கூறியுள்ளனர்.


No comments

Powered by Blogger.