"அதனை நான் செய்யாமல் இருந்திருந்தால் சிங்கள - முஸ்லிம் கலவரம் ஏற்பட்டிருக்கும்"
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற நிகழ்நிலை காப்புச் சட்டம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இங்கு மேலும் கூறுகையில்,
ஊடகங்களுக்கு முகாமைத்துவமும், ஊடக கட்டுப்பாடுகளும் இருக்க வேண்டும். நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் சட்டதிட்டங்கள் கடுமையானதாக இருந்தாலும் ஊடகங்கள் தொடர்பில் கட்டுப்பாடுகள் அவசியமாகும். எமது நாட்டில் சில ஊடகங்கள் மிகவும் மோசமான முறையிலேயே செயற்படுகின்றன.
அத்துடன் நான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் திகனவில் கலவரம் ஏற்பட்ட போது ஒருவாரத்திற்கு சமூக வலைத்தளங்களை முடக்கினேன். அதனை நான் செய்யாமல் இருந்திருந்தால் சிங்கள முஸ்லிம் கலவரம் நாடு முழுவதும் ஏற்பட்டிருக்கும். சமூகவலைத்தலளங்களை ஒருவார காலத்துக்கு இடை நிறுத்தியதாலே அதனை கட்டுப்படுத்த முடிந்தது. எவ்வாறாயினும் தவறிழைத்தவர்களுக்கு தண்டனை கொடுக்கும் வகையில் சட்டங்கள் இருக்க வேண்டும். என்றாலும் இந்த சட்டமூலத்தில் இருக்கும் விடயங்கள் மிகவும் இறுக்கமானதாகும். ஊடக ஒழுங்குமுறை, கட்டுப்பாடு அவசியமாகும். இல்லையென்றால் ஊடக உரிமையாளர்களே நாட்டை நிர்வாகம் செய்யும் நிலைமை ஏற்படும் என்றார். – Vidivelli
Post a Comment