Header Ads



""காசா வசிக்கத் தகுதியற்றதாகிவிட்டது" - ஐ.நா.


22,600க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு, கிட்டத்தட்ட 58,000 பேர் காயமடைந்த நிலையில், மூன்று மாத காலப் போருக்குப் பிறகு காஸா "வாழத் தகுதியற்றதாக" மாறிவிட்டது என்று ஐ.நா. எச்சரித்துள்ளது.


பஞ்சம் மற்றும் நோய் பரவுவதால் ஆழமடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடி குறித்து ஐ.நா எச்சரித்துள்ள நிலையில், மோதலின் சுமைகளை பொதுமக்கள் தொடர்ந்து சுமந்து வருகின்றனர்.


நிலப்பரப்பின் பெரும்பகுதி ஏற்கனவே இடிபாடுகளாகிவிட்ட நிலையில், ஐ.நா மனிதாபிமானத் தலைவர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் வெள்ளியன்று "காசா வெறுமனே வசிக்கத் தகுதியற்றதாகிவிட்டது" என்று கூறினார்.


காசாவில் மோதல்கள், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் சுகாதார சேவைகளின் பற்றாக்குறை ஆகியவை "1.1 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளை அச்சுறுத்தும் ஒரு கொடிய சுழற்சியை" உருவாக்கியுள்ளன என்று ஐ.நாவின் குழந்தைகள் நிறுவனம் எச்சரித்தது.

No comments

Powered by Blogger.